/tamil-ie/media/media_files/uploads/2019/07/VG-Siddhartha.jpg)
Cafe Coffee Day founder Veerappa Siddhartha Hegde's Mudigere days
SM krishna's Son in law missing: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ். எம் கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான வி.ஜி. சித்தார்த்தா நேற்றிரவு திடீரென மாயமானார். தற்போது அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
’கஃபே காஃபி டே’ நிறுவனத்தின் உரிமையாளரான சித்தார்த்தா நேற்று மங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் தன்னை இறக்கி விடுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். காரிலிருந்து இறங்கிய பின்னர் போனில் பேசியவாறு பாலத்தில் நடந்து கொண்டிருந்திருக்கிறார் சித்தார்தா. பின்னர் ஒரு மணி நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் அங்கு சென்று சித்தார்தாவின் டிரைவர் அவரை தேடியுள்ளார். அங்கு அவர் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர், சித்தார்தாவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Mangaluru Police Commissioner, Sandeep Patil on VG Siddhartha missing case: Boat service and help of local fishermen being taken to conduct search operation in the Netravati river. We are checking with whom all he spoke last. https://t.co/1xZtVsPHAi
— ANI (@ANI) July 30, 2019
பின்னர் அவரின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் தட்சிண கன்னட போலீசார் அவரை தேடி வருகிறார்கள். சித்தார்தாவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, எனவே ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாரா என்ற சந்தேகத்துடன் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் மருமகனை காணாமல் தவிக்கும் முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவை, தற்போதைய முதல்வர் எடியூரப்பாவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவக்குமாரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.