கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவருக்கு வயது 79.
புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட தொடகத்தில் ஜெர்மனியில் இருந்து கேரளம் திரும்பிய அவர், பேசும் திறனை 90 % மேல் இழந்திருந்தார். இதனால், உம்மன் சாண்டி சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிறப்பு சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் கேரளா கொண்டுச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது.
கேரளா சட்டசபையில் அதிக காலம் பதவி வகித்தவர் உம்மன் சாண்டி. 53 ஆண்டுகளுக்கு எம்.எல்.ஏவாகவும் காங்கிரஸ் சார்பில் 2 முறை கேரளத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.
27வயதில் 1970 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கிய அவர், அதன் பிறகு 11 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவரது மரணம் கேரள மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil