Former Orissa High Court Chief Justice S Muralidhar: ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர். எஸ் முரளிதர், சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார்.
இந்த நிலையில், அக்டோபர் 16 அன்று உச்ச நீதிமன்றம் அவரை மூத்த வழக்கறிஞராக நியமித்தது. அன்றைய தினம், நடைபெற்ற இந்திய தலைமை நீதிபதி மற்றும் பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முழு நீதிமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நீதிபதி முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, 2020 டெல்லி கலவரத்தை டெல்லி காவல்துறை கையாண்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த சிறிது நேரத்திலேயே, நீதிபதி முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட பிறகு, இறுதியில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டார்.
இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு பதிலளிக்கத் தவறியதால், இந்த ஆண்டு ஏப்ரலில் கொலீஜியத்தால் இந்தப் பரிந்துரை வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“