/tamil-ie/media/media_files/uploads/2020/05/905758-manmohan-singh.jpg)
Former prime minister Manmohan Singh discharged from AIIMS Hospital
Former prime minister Manmohan Singh discharged from AIIMS Hospital : கடந்த 10ம் தேதி அன்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க : “தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்கிறது பாஜகவின் ஆட்சி” – வைகோ கண்டனம்
இதனைத் தொடர்ந்து அவருடைய நலம் விரும்பிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அவர் விரைவில் உடல் நலம் தேறி வீட்டிற்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடல் நிலை முழுவதுமாக தேறிய நிலையில் இன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
ராஜஸ்தான் மாநிலத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மன்மோகன் சிங்கிற்கு வயது 87. இன்று மதியம் சரியாக 12:30 மணிக்கு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.