அடிக்கடி புதுவைக்கு வரும் மத்திய அமைச்சர்களால் புதுவைக்கு என்ன பயன் உள்ளது என்று புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு சார்பில் புதுவை அமைச்சரவையில் ஆதிதிராவிட மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்காத பா.ஜ.க,என்.ஆர்.காங்கிரஸ் அரசை கண்டித்து மிஷன் வீதியில் உள்ள மாதா கோவில் வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: சிறப்புக் கூறு நிதி 30 தொகுதிகள் உள்ள புதுவையில் 5 பேர் ஆதி திராவிடர்கள் ஆவர். இதில் சந்திர பிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகிய 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர்கள் 2 பேரில் ஒருவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/11/cong-protest-puducherry-2025-08-11-05-34-37.jpeg)
இதற்கான காரணம் கேட்டால், இதுவரை தெரிவிக்கவில்லை, அவர்களை நீக்கியதற்கானகாரணத்தை பிரதமர் தெரிவிக்க வேண்டும். புதுவைஅமைச்சரவையில் ஆதி திராவிட மக்களுக்கு பிரதிநித்துவம் இல்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் 18 சதவீதத்திற்கு மேல் ஆதி திராவிட மக்கள் உள்ளனர். அவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றினோம். குறிப்பாக ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை ஆதி திராவிட மக்களுக்கு இலவச கல்வி வழங்கியது காங்கிரஸ்
அரசு தான்.
இதற்காக ஆண்டுக்கு ரூ.53 கோடி ஒதுக்கீடு செய்தோம். சிறப்பு கூறு நிதியாக ரூ.235 கோடி ஒதுக்கீடு செய்து 95 சதவீதம் செலவு செய்தோம். போதைப்பொருள் விற்பனை ஆனால் தற்போது அரசு அறிவித்த திட்டங்கள் யும் நிறைவேற்றவில்லை.
புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர்கள் பலர் வந்து கலந்து கொண்ட அமைச்சர்களால் பயன் உள்ளதா? பா.ஜ.க பொறுப்பாளர்கள் அவ்வப்போது வருகின்றனர். அவர்களால் புதுச்சேரிக்கு ஏதேனும் பயனுள்ளதா?
புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது. புதிய கல்விக் கொள்கையால் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் இடைநின்றுள்ளனர்.நாற்காலிக்காக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில்
காங்கிரஸ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியை ஒதுக்கி தூக்கி எறிய வேண்டும்.” என்று நாராயணசாமி கூறினார.