புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சர் சந்திரபிரியங்காவுக்கும் அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. அவர் புதுச்சேரி அமைச்சரவையில், சாதி பாகுபாடு, பாலின பாகுபாடு இருப்பதாக குற்றம் சாட்டி தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மாதம் அறிவித்தார். ஆனால், அவரது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமியால் அவரது பதவி பறிக்கப்பட்டதாக புதுச்சேரி சபாநாயகர் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சர் சந்திரபிரியங்காவுக்கும்ம் அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், சில நாட்களுக்கு முன் சந்திரபிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபிரியங்கா தானே நேரடியாக குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தான் ஏற்கனவே வகித்த அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் சண்முகம் ஈடுபட்டதாகவும், அதனை தட்டி கேட்டதால் அதிகார வட்ட நண்பர்கள் மற்றும் தரகர்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னை சண்முகம் கட்டுப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை சந்திரபிரியங்கா முன் வைத்துள்ளார்.
மேலும் குடிகாரன், பெண் வெறியன், தன் மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண், தன்னைப் பற்றி கிசுகிசுக்களைப் பரப்பும் மற்றும் பேசும் ஒரு ஆணுடன் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்து இதை தாக்கல் செய்கிறேன்.” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“