/tamil-ie/media/media_files/uploads/2022/09/cyrus.jpg)
Former chairman of Tata Sons Cyrus Mistry (Express file photo by Nirmal Harindran)
Former chairman of Tata Sons Cyrus Mistry Died in road accident: டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், அவர் சென்ற கார் டிவைடரில் மோதியதன் காரணமாக சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 3.15 மணியளவில் சாரோட்டி அருகே உள்ள பாலத்தில் உள்ள டிவைடரில் மெர்சிடிஸ் கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் நான்கு பேர் இருந்தனர், அதில் சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்த மற்றொரு நபர் ஜஹாங்கீர் பின்ஷா பந்தோல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள், அனய்தா பண்டோல் மற்றும் டேரியஸ் பண்டோல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: மோடி படம் முதல் பேனர் போர் வரை; பா.ஜ.க – டி.ஆர்.எஸ் இடையே மேலாதிக்கப் போர்
அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சைரஸ் மிஸ்திரி பயணம் செய்தார்.
இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சைரஸ் மிஸ்திரியின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு விழாவிற்காக வெளிநாட்டில் இருப்பதாக அவரது நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
According to the police, Cyrus Mistry's car, a Mercedes, crashed into a divider near Charoti on a bridge. There were four people in the vehicle, of which two, including Mistry, died on the spot. The others have been taken to a hospital.https://t.co/CPs4x4CnVopic.twitter.com/SHT03gFyvZ
— Express Mumbai (@ie_mumbai) September 4, 2022
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்: “சைரஸ் மிஸ்திரி ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல, ஒரு இளம் மற்றும் எதிர்கால நோக்கமுள்ள தனிநபரும் ஆவார். திறமையான தொழிலதிபரை இழந்துவிட்டோம். அவரது மறைவு சைரஸ் மிஸ்திரி குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவின் தொழில் துறைக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இறந்த இருவரின் உடல்கள் பால்கர் மாவட்டத்தில் உள்ள காசாவில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காயம் அடைந்தவர்கள் குஜராத் மாநிலம் வாபியில் உள்ள ரெயின்போ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.