Former Union minister George Fernandes : இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மரணம். அவருடைய வயது 88 ஆகும். கார்கில் போர் மற்றும் பொக்ரான் அணு குண்டு சோதனைகளை நடத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்.
Former Union minister George Fernandes - வகித்த பதவிகள்
கர்நாடக மாநிலம் மங்களூரில் 1930ம் ஆண்டு பிறந்தார். எமெர்ஜென்சி காலத்திற்கு பிறகு தன்னை ஜனதா கட்சியுடன் இணைத்துக் கொண்டவர். 1977ம் ஆண்டு பிஹார் மாநிலத்தில் இருக்கும் முஸாஃபர் தொகுதியில் நின்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தொழிற்வளர்ச்சித் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
அந்த காலக்கட்டத்தில் தான் ஐ.பி.எம். மற்றும் கோகோ கோலா போன்ற அந்நிய நாட்டு நிறுவனங்களை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லி உத்தரவிட்டார்.
ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்தவர் ஃபெர்னாண்டஸ். வி.பி. சிங் ஆட்சியின் போது ரயில்வே அமைச்சராக செயல்பட்டார்.கொன்கன் ரயில்வே திட்டத்தின் மூலமாக மங்களூருவையும் மும்பையையும் ஒன்றாக இணைத்தார்.
தன்னுடைய கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியேறிய ஃபெர்னாண்டஸ் 1994ம் ஆண்டில் சமதா கட்சியை தொடங்கினார். பின்பு தேசிய ஜனநாயக் கூட்டணியுடன் இணைந்தார். இரண்டு முறை பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார் ஃபெர்னாண்டஸ். தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று விரும்பிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
இது தொடர்பான முழுமையான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க
சில வருடங்களாக உடல் நலக் கோளாறு காராணமாக அவதிப்பட்டு வந்தார். இன்று காலை, தன்னுடைய 88வது வயதில் மரணமடைந்துள்ளார். அவரின் இறப்பை அறிந்த பிரதமர் மோடி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
“ஒரு நல்ல அரசியல்வாதியாக தன்னுடைய பங்கீட்டினை அளித்தவர் ஜார்ஜ். வெளிப்படையானவர். பயமற்றவர். முன்னோக்கு சிந்தனை கொண்டவர். நம் நாட்டிற்கு அவர் அளப்பறிய சேவையை ஆற்றியுள்ளார். ஏழைகளின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்தவர். அவர் மரணமடைந்த செய்தியைக் கேட்டு வருந்துகிறேன்” என ட்வீட் செய்துள்ளார் மோடி.
George Sahab represented the best of India’s political leadership.
Frank and fearless, forthright and farsighted, he made a valuable contribution to our country. He was among the most effective voices for the rights of the poor and marginalised.
Saddened by his passing away.
— Narendra Modi (@narendramodi) 29 January 2019
மம்தா பானர்ஜீயின் இரங்கல் செய்தி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தன்னுடைய இரங்கல் செய்தியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Very saddened at the passing away of former Defence Minister and much admired trade unionist, George Fernandes Ji. I have known him for decades. My condolences to his family and admirers
— Mamata Banerjee (@MamataOfficial) 29 January 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.