ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கங்கை நதியின் தடையில்லாத நீரோட்டத்திற்கு மத்திய அரசு துணை நிற்கும் என கூறிய நிலையில், அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரும், முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சருமான உமாபாரதி, கங்கை நிதியின் இயற்கை தன்மையை பாதிக்கும் திட்டங்கள் குறித்து புகாரளித்தார்.
2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஸ்ரீநகரில் அறிவிக்கப்பட்ட மின் திட்டம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மேலும், கங்கை நிதி நீண்ட தூரம் வறண்டு இருக்கும் காணொலியை ட்விட்டரில் பகிர்ந்த உமா பாரதி, பிரதமரையும், உத்தரகண்ட முதல்வரையும் டேக் செய்து, இவ்விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
போட்டோஷாப் பிக்கால் சர்ச்சை
பாஜக மகிளா மோர்ச்சா தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், கட்சி தலைமையகத்திற்கு வெளியே அனைத்து தேசியப் பொறுப்பாளர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் சர்ச்சையை ஏறஅபடுத்தியது. அவர் பதிவிட்ட புகைப்படம், போட்டோஷாப் செய்யப்பட்டது என நெடிஸ்சன்கள் கருத்து தெரிவிக்க தொடங்கினர். அவர், குழு புகைப்படத்துடன் இணைக்கப்பட்டிருந்தது தெளிவாக தெரிந்தது.
அதே போல், பாஜக பொருளாளர் ராஜேஷ் அகர்வால், பரேலி எம்.எல்.ஏ என புகைப்படமும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கட்சி தலையகத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், சீனிவாசன் மற்றும் அகர்வால் இருவரும் அலுவலகத்தில் இருந்தனர். ஆனால் புகைப்படம் எடுத்தப்போது மிஸ் செய்துவிட்டனர். இதன் காரணமாக, அவர்களுது புகைப்படம் குரூப் போட்டோவில் இணைக்கப்பட்டது என்றார். இவ்விவகாரத்திற்கு, வானதி சீனிவாசனும் விளக்கமளித்துள்ளார்.
புகாரால் திகைத்து நின்ற தேசிய ஆணைய அதிகாரிகள்
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் ஆண்டுதோறும் சுமார் 1,500 புகார்களைப் பெறுகிறது, அதில் பெரும்பாலானவை நிலத் தகராறுகள் மற்றும் பாகுபாடு தொடர்பான புகார்கள் தான். அண்மையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தன்னை மாடு இடித்து கீழே தள்ளிவிட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரியாமல் இருப்பதாக ஆணைய அதிகாரிகள் கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil