/indian-express-tamil/media/media_files/BoVPHDEDJsJl1ELCTvYu.jpg)
Four Indian medical students drown in Russia
ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள ஆற்றில் நான்கு இந்திய மருத்துவ மாணவர்கள் மூழ்கி உயிரிழந்தனர், அவர்களது உடல்களை இந்தியாவுக்கு விரைவில் அனுப்பி வைக்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
18-20வயதுடைய இரு மாணவிகள், இரு மாணவர்கள் உட்பட நான்கு பேர் அருகிலுள்ள வெலிகி நோவ்கோரோட் நகரத்தில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
வோல்கோவ் ஆற்றில் சிக்கிய இந்திய மாணவியை அவரது நான்கு தோழர்கள் காப்பாற்ற முயன்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவளைக் காப்பாற்றும் முயற்சியில் மேலும் மூவரும் ஆற்றில் மூழ்கினர்.
மூன்றாவது மாணவனை உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக காப்பாற்றினர்.
1/2 @indianconsspb is working together with the local authorities of Veliky Novgorod to send the mortal remains to the relatives as soon as possible. The bereaved families have been contacted and assured of all the possible help. https://t.co/QFMdv7lKhd
— India in St. Petersburg (@indianconsspb) June 7, 2024
உடல்களை விரைவில் உறவினர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். உயிரைக் காப்பாற்றிய மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்று மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் X இல் தெரிவித்துள்ளது
இந்த மாணவர்கள் வெலிகி நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி பயின்று வருவதாகவும், வெலிகி நோவ்கோரோட்டின் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, சடலத்தை உறவினர்களுக்கு விரைவில் அனுப்புவதற்கு பணிபுரிவதாகவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்பு கொண்டு, சாத்தியமான அனைத்து உதவிகளுக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது, என்று அது கூறியது.
Read in English: Four Indian medical students drown in Russia
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.