Advertisment

உறுப்பு பெறுபவர்களில் 5ல் 4 பேர் ஆண்கள்: நோட்டோ ஆய்வில் தகவல்

1995 - 2021ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் உள்ள 5 உறுப்பு பெறுநர்களில் 4 பேர் ஆண்கள் என்று தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பான நோட்டோ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Four out of five organ recipients in country are men NOTTO data Tamil News

நோட்டோவின் தரவுகளின்படி, நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

India: தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பான நோட்டோ ( National Organ and Tissue Transplant Organisation - NOTTO) அண்மையில் தொகுத்த தரவுகளின்படி, 1995 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் உள்ள ஐந்து உறுப்பு பெறுநர்களில் நான்கு பேர் ஆண்கள் என்றும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மொத்த 36,640 நோயாளிகளில், 29,695 பேர் ஆண்கள் என்றும் தெரிவித்துள்ளது. 

Advertisment

"உறுப்பு பெறுநர்களின் தரவு என்னவென்றால், மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை விகிதாசாரமாக குறைவாக உள்ளது. மாற்று அறுவை சிகிச்சையின் தேவைக்கு வழிவகுக்கும் நிலைமைகளின் பரவலானது ஆண்களையும் பெண்களையும் ஒரே விகிதத்தில் பாதிக்கிறது என்று நாம் கருத வேண்டும். மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது நிச்சயமாக ஒரு பிரச்சினையாகும். இந்தப் போக்கை மாற்றியமைக்க அதிக விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது." என்று நோட்டோவின் இயக்குனர் டாக்டர் அனில் குமார் கூறினார். 

மேலும், பெண் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டினாலும், குடும்பங்களில் சம்பாதிக்கும் ஆண் உறுப்பினர்களைப் பாதுகாக்க விரும்புவதால், அவர்கள் மீது சம்மதம் கட்டாயப்படுத்தப்படாமல் இருக்க சட்டத்தில் போதுமான பாதுகாப்புகள் உள்ளன என்றும் டாக்டர் அனில் குமார் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Four out of five organ recipients in country are men: NOTTO data

இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுபம் சிபல் பேசுகையில், "பெறுநர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் விஷயத்தில் கண்டிப்பாக பாலின சார்பு உள்ளது" என்றார்.

1998 இல் தொடங்கப்பட்ட அப்பல்லோவின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அனுபம் சிபல், பெரும்பாலும் ஆலோசனையின் காரணமாக நன்கொடையாளர்களிடையே பாலின இடைவெளி குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து டாக்டர் அனுபம் சிபல் பேசுகையில், "எங்கள் திட்டத்தின் தரவைப் பார்த்தால், சுமார் 2021 வரை 75% அம்மாக்களிடமிருந்தும், 25% அப்பாக்களிடமிருந்தும் வந்தன. இப்போது 51% நன்கொடைகள் அம்மாக்களிடமிருந்தும், 49% அப்பாக்களிடமிருந்தும் வந்துள்ளன. இயல்பிலேயே பெண்கள் அதிக விருப்பமுள்ள நன்கொடையாளர்களாக இருந்தாலும், தங்கள் சொந்த குணத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். ஆண்களிடமிருந்து நன்கொடைகள் அதிகரிப்பது ஆலோசனையின் மூலம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் அதிக கேள்விகளைக் கொண்டுள்ளனர். மேலும் உறுப்பு தானம் செய்வதில் அவர்களுக்கு வசதியாக இருப்பது எங்கள் வேலை.

பெறுநர்களைப் பொறுத்தவரை, ஒரு மருத்துவராக, பாலினம் ஏன் முக்கியம் என்பதுதான் எனது கேள்வி? ஒரு நபருக்கு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அவர் அதைப் பெற வேண்டும். ஆனால் உண்மை என்னவென்றால், மாற்று அறுவை சிகிச்சைகள்  அல்லது திறந்த இதய அறுவை சிகிச்சை அல்லது குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை சரிசெய்ய அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகள் வரும்போது, பெண்களை விட ஆண்களே அதிகம் பெறுகிறார்கள். மீண்டும், இந்த போக்கை மாற்ற விழிப்புணர்வு முக்கியமானது."

உதாரணமாக, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு பெண் குழந்தையின் பெற்றோர்கள், அவர் சாதாரணமாக பருவமடைய முடியுமா, அவருக்கு குழந்தை பிறக்க முடியுமா என்று கவலைப்படுகிறார்கள். மேலும், அவரால் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியும் என்பதை அவர்கள் அறிந்ததும், அவர்கள் மாற்று அறுவை சிகிச்சையைப் பெற தயாராக உள்ளனர்." என்று அவர் கூறினார். 

நோட்டோவின் தரவுகளின்படி, நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2022ல் இது போன்ற 16,041 நடைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடும்ப உறுப்பினர்களின் உறுப்புகள் பயன்படுத்தப்படும் உயிருள்ள நன்கொடை மாற்று அறுவை சிகிச்சைகளில், டெல்லி 3,422 மாற்று அறுவை சிகிச்சைகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. இது தமிழகத்தை (1,690 மாற்று அறுவை சிகிச்சைகள்) முந்தியுள்ளது. இருப்பினும், 2022ல் 555 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுடன், மூளை இறந்த நோயாளிகளின் உறுப்புகள் பயன்படுத்தப்படும் இறந்த நன்கொடையாளர்களின் மாற்று அறுவை சிகிச்சையின் மற்றொரு பிரிவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 243 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இது தான் இதுவரை நடந்த அதிகபட்ச இதய மாற்று அறுவை சிகிச்சை ஆகும். மற்றும் 144 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment