புல்வாமா துப்பாக்கி சூடு: ஒரு மேஜர் உட்பட 4 வீரர்கள் வீர மரணம்

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைப்பெற்றது. 

பாலகோட்
பாலகோட்

நாட்டையே உலுக்கியிருக்கிறது புல்வாமா பயங்கரவாத தாக்குதல். 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 ராணுவ வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள்.

புல்வாமா மாவட்டத்தில் இருக்கும் பிங்க்லன் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைப்பெற்றது.

இதில் ஒரு மேஜர் உட்பட 4 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் மேலும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

Web Title: Four soldiers were killed in pulwama encounter

Next Story
புல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்Pulwama Terrorist Attack
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express