India France Rafale Deal judicial probe : இந்தியாவுடனான ரூ .59,000 கோடி ரஃபேல் போர் ஜெட் ஒப்பந்தத்தில் "ஊழல் மற்றும் சாதகான சூழ்நிலைக்கு உட்பட்டதாக வெளியான தகவலை அடுத்து இது குறித்து விசாரணைக்கு தலைமை தாங்க ஒரு பிரெஞ்சு நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு புலனாய்வு வலைத்தளமான மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தாமாக முன்வந்து, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி)க்கு விசாரணைக்கு உத்தரவிடுமாறு காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, வலியுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்து பிரெஞ்ச் அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது தெளிவாக தெரியவந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது, ”என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தவீசாரணை தொடர்பாக இந்திய அரசோ அல்லது பாஜகவோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள மீடியா பார்ட், கடந்த 2016-ம் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே நடைபெற்ற இந்த இந்த ஒப்பந்தம் குறித்து விசாரணையை ஜூன் 14-ந் தேதியே தொடங்கி விட்டாகவும் குறிப்பிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தின் சமீபத்திய வளர்ச்சி குறித்து கூறியுள்ள மீடியாபார்ட் கடந்த 2016-ம் ஆண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்த்த்தின் அடிப்படையில், "டசால்ட் முறையில் தயாரிக்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களை 7.8 பில்லியன் யூரோ இந்தியாவிடம் விற்றது பிரான்ஸ் அரசு. இந்த ஒப்பந்தத்தில் தவறுகள் நடந்ததாக ஏப்ரல் மாதத்தில் மீடியாபார்ட்டின் புதிய அறிக்கைகள் மற்றும் நிதிக் குற்றங்களில் நிபுணத்துவம் வாய்ந்த பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனமான ஷெர்பா அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரான்சின் தேசிய நிதி வக்கீல்கள் அலுவலகத்தால் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரான்சில் ஊழல் நடந்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் சூழலில் தற்போது இது தொடாபாக நீதி விசாரணைக்கு நீதி விசாரணை திறக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து தொடர்ச்சியான அறிக்கைகளை தாக்கல் செய்த மீடியாபார்ட் பத்திரிகையாளர் யான் பிலிப்பின், தான் 2019 ஆம் ஆண்டில் கொடுத்த முதல்புகார் முன்னாள் பிஎன்எஃப் தலைவரால் மறைக்கப்பட்டாக கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில், ஏப்ரல் மாதம், மீடியாபார்ட், நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பின் விசாரணையை மேற்கோளிட்டு, டசால்ட் ஏவியேஷன் ஒரு இந்திய இடைத்தரகருக்கு சுமார் ஒரு மில்லியன் யூரோக்களை செலுத்தியதாக கூறியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள டசால்ட் ஏவியேஷன் ஒப்பந்தத்தின் சட்டத்தில் எந்த மீறல்களும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
126 நடுத்தர மல்டி-ரோல் காம்பாட் விமானத்தை (ஏறக்குறைய) ஏழு ஆண்டு பயிற்சிக்குப் பின்னர், பிரெஞ்சு விண்வெளி முக்கிய டசால்ட் ஏவியேஷனில் இருந்து 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) அரசாங்கம் செப்டம்பர் 23, 2016 அன்று ரூ .59,000 கோடி ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின் போது இந்திய விமானப்படைக்கான எம்.எம்.ஆர்.சி.ஏ) பலனளிக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் அரசாங்கத்திற்கு பாரிய முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது, எம்.எம்.ஆர்.சி.ஏவுக்கான பேச்சுவார்த்தைகளின் போது யுபிஏ அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்ட ரூ .56 கோடிக்கு எதிராக ஒவ்வொரு விமானத்தையும் 1,670 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்வதாக குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், இந்த ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் பல கேள்விகளை எழுப்பியதுடன், ஊழல் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியது, ஆனால் அரசாங்கம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.