scorecardresearch

சீனா பெண்ணிடம் பாதுகாப்பு ரகசியங்களை விற்ற டெல்லி பத்திரிகையாளர்: அதிரடி கைது

சீன உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை பகிர்ந்ததற்காக பகுதி நேர பத்திரிகையாளர் ராஜீவ் சர்மாவை சிறப்பு பிரிவு கைது செய்தது.

சீனா பெண்ணிடம் பாதுகாப்பு ரகசியங்களை விற்ற டெல்லி பத்திரிகையாளர்: அதிரடி கைது

சீன உளவுத்துறைக்கு ​​முக்கியத் தகவல்களை அனுப்பியது தொடர்பாக பகுதி நேர பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மா பெரும் தொகையை பெற்றதாகவும், இது தொடர்பாக சீனா மற்றும் நேபாள் நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது.

சீன உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை பகிர்ந்ததற்காக பகுதி நேர பத்திரிகையாளர் ராஜீவ் சர்மாவை சிறப்பு பிரிவு கைது செய்துள்ளது. ராஜீவ் சர்மாவுக்கு போலி நிறுவனங்கள் (ஷெல்) மூலம் ஏகப்பட்ட தொகையை பரிமாற்றம்  செய்தது தொடர்பாக சீனாவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி பெண் ஒருவரும், அவரது நேபாள கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஏராளமான மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

“அவர் சில ராணுவ ரகசிய ஆவணங்களை வைத்திருந்தார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விவரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்”என்று துணை போலீஸ் கமிஷனர் (சிறப்பு செல்) சஞ்சீவ் குமார் யாதவ் நேற்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Freelance journalist rajeev sharma arrested for providing sensitive infromation to chinese intelligence

Best of Express