கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாஜக தலைமைக்கு புதிய நெருக்கடி வந்துள்ளது. செவ்வாய்க் கிழமை அன்று நீர்வளத்துறை அமைச்சர் ஜர்கிஹோலி அடையாளம் தெரியாத இளம்பெண் இருக்கும் வீடியோ சி.டி. மற்றும் அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. ஒரு சமூக ஆர்வலர், தினேஷ் கலாஹள்ளி, அந்த பெண்ணின் குடும்பத்தினரால் தான் அங்கீகரிக்கப்பட்ட நபர் என்று கூறி, பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், வீடியோ கிளிப்களில் உள்ள பெண்ணிடம் அரசாங்க வேலை வாங்கித்தருவதாக கூறி அமைச்சர் ஏமாற்றியுள்ளார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் அவர். காவல்துறை இன்னும் முறையான வழக்கை பதிவு செய்யவில்லை, புகாரின் நியாயத்தன்மையை சரிபார்க்கிறது என்று துணை காவல் ஆணையர் எம்.என். அனுச்சேத் தெரிவித்தார்.
கட்சி தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் முதல்வர் எடியூரப்பா. ஜர்கிஹோலியிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பாஜக தலைவர்கள் இதற்கு எந்த விதமான கருத்துகளும் தெரிவிக்காத நிலையில், ஜர்கிஹோலியிடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. அவருடைய அலைபேசி “ஸ்விட்ச் ஆஃப்” செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
வடக்கு கர்நாடகாவின் பெலகவியில் இருந்து வந்திருக்கும் இந்த அமைச்சர் பாஜக தலைமையிலான ஆட்சியில் முக்கியமான அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் ஜர்கிஹோலியும் பெல்கவி பகுதியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகள் தான் 2019ம் ஆண்டு காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
17 காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களை பாஜகவிற்கு கட்சி தாவ செய்ததன் பின்னணியில் இவர் இருப்பதாக கூறப்பட்டது. இதன் மூலமாக அங்கு 2019ம் ஆண்டு ஜூலை மாதம் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. அன்றில் இருந்து புதிதாக பாஜகவிற்கு வந்த எம்.எல்.ஏக்களுக்கும், ஏற்கனவே இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறார். வால்மிகி நாயக பழங்குடி சமூகத்தை சேர்ந்த அவர், தன்னுடைய பழங்குடி இனத்திற்கான இட ஒதுக்கீட்டினை அதிகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Karnataka Water Resources Minister Ramesh Jarkiholi resigns after a video purportedly showing him seeking sexual favours from a woman emerged on Tuesday. In his letter to CM @BSYBJP, he says charges against him is not true and requests to conduct an inquiry. (1/2) @IndianExpress pic.twitter.com/TGSaEKa6zW
— Darshan Devaiah B P (@DarshanDevaiahB) March 3, 2021
பெலகவி பகுதியில் இருந்து வந்து கர்நாடக அரசியலில் முக்கிய புள்ளிகளாக திகழும் நான்கு நபர்களில் ஜர்கிஹோலியும் ஒருவர். முதலமைச்சராக வேண்டும் என்ற லட்சியம் உள்ளவராக அறியப்பட்டுள்ளார். நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயில்வேத்துறை இணை அமைச்சராக பதவி வகித்த சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்த நிலையில் அவருடைய மக்களவை தொகுதியான பெலகவி காலியானது. அதற்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் ஜர்கிஹோலியின் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோக்கள் வெளியானதால் காங்கிரஸ் இளைஞரணி அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு ஜர்கிஹோலி பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.மார்ச் 4ம் தேதி அன்று நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த சி.டி. விவகாரம் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் பாஜக மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது.
2016ம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, மூத்த அமைச்சர் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அப்போது 71 வயதான எச்.ஒய். மெதி சித்தராமையாவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தார். அந்த வீடியோவை பெல்லாரியை சேர்ந்த ஆர்.டி.ஐ. செயலாளர் ஒருவர் வெளியிட்டார்.
2019ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ ஒருவர், இது போன்ற விவகாரங்களில் தன்னை சிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று பெங்களூரு குற்றப்பிரிவில் புகார் ஒன்றை வைத்தார். 49 வயதான அந்த எம்.எல்.ஏ அவருடைய பெயர் எந்த ஒரு ஊடகத்தாலும் அடையாள பயன்படுத்த கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினார். அவர் இது போன்று 12 அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைகளை பிரச்சனைக்குள் சிக்க வைக்க அந்த குழு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்நிலையில் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் ரமேஷ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.