உலகில் மூழ்காத ‘ஷிப்’ பிரண்ட்ஷிப் – இன்று சர்வதேச நண்பர்கள் தினம்

Friendship day : காதல் வேண்டுமானாலும் தோற்கலாம்; ஆனால், நட்பு தோற்றதாக, கல்வெட்டில் கூட பதிக்கவில்லை வரலாறு

friendship day 2019, friendship day date, friendship day date 2019, friendship day wishes, friendship day 2019 images, friendship day messages, friendship day 2019 quotes, நண்பர்கள் தினம், நண்பர்கள் தின வாழ்த்துகள், friendship day celebration
friendship day 2019, friendship day date, friendship day date 2019, friendship day wishes, friendship day 2019 images, friendship day messages, friendship day 2019 quotes, நண்பர்கள் தினம், நண்பர்கள் தின வாழ்த்துகள், friendship day celebration

world friendship Day 2019 :
சூரியன் – சந்திரன்
இரவு – பகல்
ஆண் – பெண்

இறைவனின் படைப்பில், இப்படி எல்லாமே இரண்டாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஏதாவது ஒரு தேடுதல், நம்மை அறியாமலேயே, நிழலாக பயணித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த பயணத்தின் ஏதோ ஒரு நிறுத்தத்தில், நொடிப்பொழுது உதித்து, புருவத்தை உயர்த்தும் பார்வை, இன்றளவும் இனம் புரியாத இன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதில், காதலையும், காமத்தையும் மட்டுமே எடுக்கும் வழக்கம், புரையோடிக் கிடக்கிறது. “காதல் தான் எல்லாம்’ என்ற திரைப்பட வசனத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறது. ஆனால், அதற்கும் மேலாக, எல்லாவற்றையும் தகர்த்தெறியும் சக்தி நட்புக்கு உண்டு என்றால், அவ்வளவு சீக்கிரம் யாரும் மறுக்க முடியாது. காதலில் எதிர்பார்ப்பு இருக்கும். நட்பில், என்ன எதிர்பார்ப்பு இருந்து விடப் போகிறது. எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது தானே உண்மையான நட்பு.

வாழ்க்கைக்கு ஒரு இலக்கணம், திருமணத்துக்கு ஒரு இலக்கணம், காதலுக்கு ஒரு இலக்கணம் இருக்கும் போது, நட்புக்கு என்று ஒரு இலக்கணம் எழுதி வைக்காத படைப்புகளாக, இந்த உலகத்தின் பாணியில், தனி வழியில், காவியமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. காதல் வேண்டுமானாலும் தோற்கலாம்; ஆனால், நட்பு தோற்றதாக, கல்வெட்டில் கூட பதிக்கவில்லை வரலாறு. உன்னதமான நட்பை வாழ்த்துவோம்…! இந்த உலகம், இன்னும் உயிரோடு இருக்கும். இன்று, நண்பர்கள் தின விழா.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Friendship day friendship day wishes friendship day celebration

Next Story
மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்… என்ன நடக்கிறது காஷ்மீரில்?Jammu Kashmir Enhanced troop deployment
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express