மும்பையில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 15 வயதான மலீஷா கர்வால் இந்திய தோல் பொருள்களின் ப்ராண்ட் முகமாக மாறியுள்ளார். இந்த வார தொடக்கத்தில் அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டி ஒன்றில், “உங்கள் கனவை ஒருபோதும் கைவிடாதீர்கள், ஏனென்றால் உங்கள் கனவுகள் முக்கியம்” என்றார்.
ஐரோப்பிய வானியல் நிறுவனம் கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதுபோன்ற சில செய்திகளை புதிய நாடாளுமன்ற திறப்பு, சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை உள்ளிட்ட செய்திகளால் நீங்கள் தவறவிட்டிருக்கலாம். அந்தச் செய்திகள் குறித்து பார்க்கலாம்.
1) ஷ்ரத்தா பாண்டே கருத்து
ஐபிஎஸ் அதிகாரி ஷ்ரத்தா பாண்டே, “வீட்டிலும் பணியிடத்திலும் சமத்துவம் ஒரு சவாலாக உள்ளது” என்று கூறியிருந்தார்.
2) புதிய வரி விதிகள்
ஆன்லைன் கேமிங் தளங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ளது. அதில், ரூ.100க்கும் கீழ் வெற்றி பெறுபவர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் இல்லை. ஆனால் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
3) பாந்த்ரா குடிசை நட்சத்திரம்
15 வயதான மலீஷா கர்வா ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் என்ற தோல் பராமரிப்பு பிராண்டின் பிரச்சாரத்தின் முகமாக தேர்வாகியுள்ளார். இவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டி ஒன்றில், “உங்கள் கனவை ஒருபோதும் கைவிடாதீர்கள், ஏனென்றால் உங்கள் கனவுகள் முக்கியம்” எனத் தெரிவித்திருந்தார்.
4) இரண்டு வாரத்துக்கு ஒரு என்கவுன்ட்டர்
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் குற்றங்களை ஒடுக்குவது எப்போதுமே முதன்மையாக இருந்து வருகிறது.
2017ல் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில் 186 என்கவுன்டர்கள் நடந்துள்ளன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய போலீஸ் பதிவுகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் காவல்துறையால் கொல்லப்படுவதை இது காட்டுகிறது.
5) அண்டவெளியில் கருந்துளை
6,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள காஸ்மிக் சுற்றுப்புறத்தில் ஒரு அரிய 'இடைநிலை-நிறை' கருந்துளையை கண்டுபிடித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“