ரயில் டிக்கெட் உறுதியாகும் வாய்ப்புகள், ரயில்களில் உணவுகள் ஆர்டர் செய்வது, கால்டாக்சி புக்கிங் என கலக்கும் ஐஆர்சிடிசி இணையதளம் பயணிகளை பெருமளவில் கவர்ந்துள்ளது.
இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் நாள்தோறும் 2கோடிக்கும் அதிகமான் பயணிகள் செய்து வருகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு சேவைக்காக தொடங்கப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் தற்போது புதுபிக்கப்பட்டு பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கி, வெயிட்டிங் லிஸ்ட் நிலை, இருக்கை அல்லது படுக்கை வசதி நிலை, உணவு ஆர்டர்,கால் டாக்ஸி வசதி என பல வசதிகளுடன் புதுபிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, ஐஆர்சிடிசி இணையதளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூலை 15 முதல் ராஜ்தானி மற்றும் துரந்தோ பயணிகள் ரயில்களில் அசைவ உணவுகள், சாக்லெட் உணவுகளுட்ன கூடிய காலை உணவு, பல வகையான உணவுகள் அடங்கிய மதிய உணவு பட்டியல் ஆகியவைவும் செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த உணவுகளை ஆர்டர் செய்ய பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதைத்தவிர மற்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் பயணிகளுக்காக ஐஆர்சிடிசியில் தொடங்கப்பட்டுள்ள புதிய வசதிகளின் முழு விபரம் இதோ உங்களுக்காக..
1. ரயிலில் உள்ள சமயலறையில் சமைக்கப்படும் உணவுகளை பயணிகளால் ஐஆர்சிடிசி இணையதளத்தில் லைவாக பார்க்க முடியும்.டெல்லி, மும்பை,ஜான்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் ரயில்களில் மட்டும் தற்சமயம் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2. சமைக்கப்படும் உணவுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் ஐஆர்சிடிசியில் உள்ளது.
3. ரயில் நிலையங்களில் வைஃபை, பேட்டரி கார், ஓய்வு அறைகள் உள்ள பட்டியல், உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி.
4. கால்டாக்சி புக்கிங் வசதி, செல்போன் செயலி மூலம் சேவை பெறும் வசதி.
5. ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் அதன் விலைப் பட்டியலை பார்வையிடும் வசதி.
6.நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட விபரங்களை எளிமையாக மக்கள் பார்க்கும் வசதி.