போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
duplicate voters

போலி வாக்காளர் முதல் செல்லாத முகவரிகள் வரை: வாக்குத் திருட்டு - ஆதாரங்களுடன் விளக்கமளித்த ராகுல் காந்தி

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் "வாக்கு திருட்டு" நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர், 5 வழிகளில் இந்த மோசடி அரங்கேறி உள்ளதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

Advertisment

காங்கிரஸ் கட்சி பெங்களூரு மத்திய தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் நடத்திய விசாரணையின் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; பெங்களூரு மத்திய தொகுதியில் 1,00,250 போலி வாக்குகளை உருவாக்கி தேர்தல் திருடப்பட்டதாகக் கூறினார். மகாதேவபுரா தொகுதியின் தரவுகளை ஆய்வு செய்யவே பல மாதங்கள் ஆனது என்றும் அவர் கூறினார்.

மகாதேவபுரா தொகுதியில் பெரும் வித்தியாசம்

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும், மகாதேவபுரா தவிர மற்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். மகாதேவபுராவில் 1,14,046 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால், மக்களவைத் தொகுதியை அது கைப்பற்றியது.

Advertisment
Advertisements

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

“ஒரு தொகுதியிலிருந்து மட்டும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி வந்தது என்று நாங்கள் ஆய்வு செய்தோம். இது மிகப்பெரிய சமநிலையற்ற தன்மை. மகாதேவபுரா தொகுதியை ஆய்வு செய்தபோது, 6.5 லட்சம் மொத்த வாக்குகளில் 1,00,250 வாக்குகள் 5 வெவ்வேறு வழிகளில் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம்” என்று அவர் கூறினார்.

5 விதமான முறைகேடுகள் - அம்பலப்படுத்திய ராகுல்காந்தி

ராகுல் காந்தி, இந்த வாக்குகள் 5 வழிகளில் திருடப்பட்டதாக விளக்கினார். போலி வாக்காளர்கள் (Duplicate voters) ஒரே நபரின் பெயர் மற்றும் புகைப்படம் பல வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றது. போலியான மற்றும் செல்லாத முகவரிகள் (Fake and invalid addresses) முகவரி இல்லாத அல்லது சரிபார்க்க முடியாத வாக்காளர்கள். ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் (Bulk voters in a single address) சிறிய வீட்டில் பல குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். செல்லாத புகைப்படங்கள் (Invalid photos) வாக்காளர் பட்டியலில் புகைப்படங்கள் இல்லாத அல்லது அடையாளம் காண முடியாத அளவுக்கு சிறிய புகைப்படங்கள் உள்ள வாக்காளர்கள். படிவம் 6 தவறான பயன்பாடு (Misuse of Form 6) புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6ஐ பயன்படுத்தி முதியவர்கள் மீண்டும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டது.

ஆதாரங்களுடன் விளக்கிய ராகுல்காந்தி

இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார்.

போலி வாக்காளர்கள்: குர்கிரத் சிங் டாங் என்ற ஒருவரின் புகைப்படம் 4 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இதேபோல் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற பெயரில் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

போலியான முகவரிகள்: “ஹவுஸ் எண் 0”, தந்தையின் பெயர் “ilsdfhug,” “dfoigoidf” போன்ற செல்லாத தகவல்கள் கொண்ட 40,009 வாக்காளர்கள் இருந்தனர்.

ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள்: ஒரு சிறிய வீட்டில் 80 வாக்காளர்கள் வசிப்பதாகவும், “153 Beire club” என்ற மதுபானக் கடையில் 68 வாக்காளர்கள் வசிப்பதாகவும் ராகுல் காந்தி படங்களுடன் விளக்கினார்.

படிவம் 6 தவறான பயன்பாடு: 70 வயதுடைய ஷகுன் ராணி என்ற பெண், புதிய வாக்காளர் படிவம் 6ஐப் பயன்படுத்தி 2 முறை பதிவு செய்து, 2 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்துள்ளார். புதிய வாக்காளர்கள் எனப் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

தேர்தல் ஆணையம் மீது குற்றம்

“இது ஒரு தொகுதியில் நடந்த கிரிமினல் குற்றம். இது போன்ற குற்றங்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் நடந்து வருவதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக இணைந்து செய்த சதி,” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் ஆதாரங்களை அழித்து வருவதாகவும், நீதித்துறை இதில் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Rahul Gandhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: