அன்னையர் தினம் ஸ்பெஷல்: அரசியலில் ஒரு கைப் பார்த்த அம்மாக்கள்!!!

அன்னையர் தினமான இன்று, இந்திய அரசியலில் பெருமையுடனும், பிரபலமாகவும் வளம் வந்த தாய்கள் மற்றும் அவர்கள் பற்றிய சிறப்பு கண்ணோட்டம்.

By: May 13, 2018, 10:14:44 AM

இந்திய அரசியலில் பெண்களின் வரலாறு ஒரு நூறு ஆண்டுகளுக்கும் முன்பு கடந்து செல்கிறது. இந்திய அரசியலமைப்பிற்கு வாக்களிக்கும் உரிமையைப் பெண்கள் முன்வைப்பதற்கு முன்பே, அவர்களில் பெரும்பாலோர் சமூகத்தில் வித்தியாசத்தைக் கொண்டு வர முயற்சித்து வெற்றி பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து இந்திய அரசியலில் இந்திரா காந்தி முதல் ஷீலா திக்‌ஷித் வரை பிரபலமான பெண் அரசியல் தலைவர்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இவர்கள் அனைவரும் நாட்டின் அரசியல் தலைவர்களாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல தாயாகவும் பொறுப்பு வகித்தவர்கள்.

1. இந்திரா காந்தி

indira-rajiv

இந்திரா காந்தி. இவர் நாட்டின் முதல் பெண் பிரதமர். ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு தம்பதியருக்கு பிறந்த ஒரே குழந்தை இவர். ஜவஹர்லால நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்திரா காந்தி தனது அரசியல் பயணத்தை 1964ம் தொடங்கினார். பின்னர் ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ராஜிவ் காந்தி மற்றும் சஞ்சை காந்தி. தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதிவியில் நீடித்தவர் இந்திரா காந்தி. 1984ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் இந்திரா காந்தியை தொடர்ந்து அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றார். 1991ம் ஆண்டு நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து இளைய மகன் சஞ்சய் காந்தி பதவி ஏற்பார் என்று எண்ணியிருந்த நிலையில், அவரும் விமான விபத்தில் பலியானார்.

2. ஷீலா திக்‌ஷித்

Congress nominates Sheila Dikshit as UP CM candidate

நீண்ட காலம் தில்லியின் முதல்வராக இருந்தவர் ஷீலா திக்‌ஷித். 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை இவர் தில்லியின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். பின்னர் 2014ம் ஆண்டு கேரள மாநிலத்தின் ஆளுநராகப் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் பதவி ஏற்ற சில மாதத்திலேயே அவர் பதவி விலகினார். ஷீலா திகஷித் திருமணம் ஐஏஎஸ் அதிகாரியான வினோத் திக்‌ஷித் உடன் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. பெண் லத்திகா சையத் மற்றும் ஆண் சந்தீப் திக்‌ஷித்.

3. சோனியா காந்தி

rahul-sonia-gandhi

சோனியா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி ஆவார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். 19 வருடங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தார். பின் வரும் நாளில், 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து இவரின் மகன் ராகுல் காந்தி தலைவர் பதவி ஏற்றுக் கொண்டார். ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு, 1997ம் ஆண்டு சோனியா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் கால் பதித்தார். ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி.

4. ரபரி தேவி

tejashwi-tej-devi-759yh

லாலு பிரசாத்தின் மனைவியான ரபரி தேவி, மூன்று முறை பிகார் முதல்வராக இருந்துள்ளார். பிகாரின் முதல் பெண் முதல்வர் ரபரி. லாலு பிரசாத் ஊழல் வழக்கில் கைதான பிறகு, அவர் இடத்தில் இருந்து முதல்வர் பதவி ஏற்றவர். இவர்கள் இருவருக்கும் 9 குழந்தைகள் உள்ளன. 9 குழந்தைகளில் 7 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள். இவர்களின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரின் ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர். பின்னர் லாலு பிரசாத் ஊழல் வழக்கில் அந்த ஆட்சி 20 மாதத்திலேயே கலைந்தது. மேலும் மூத்த மகன் தேஜ் பிரதாப் சுகாதார அமைச்சராக இருந்தவர்.

5. விஜய ராஜி சிந்தியா

vijaya raje scindia

விஜய ராஜி சிந்தியா, குவாலியரின் ராஜமாதா என்று பிரபலமாக அறியப்பட்டவர். 1941ம் ஆண்டு ஜியாஜி ராவ் சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 4 மகள் மற்றும் ஒரு மகன் பிறந்தது. மூத்த மகள் வசுந்தரா ராஜி, பாஜக கட்சியை சேர்ந்தவர் மற்றும் இரண்சு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்துவர். இளைய மகள் யஷோதரா ராஜி, குவாலியரில் போட்டியிட்டு வென்றவர். மேலும் யஷோதரா மத்திய பிரதேசத்தின் அமைச்சரவை மந்திரியாக இருந்தவர். இந்தத் தம்பதியின் ஒரே மகனான மாதவ் ராவ் சிந்தியா, 9 முறை லோக் சபாவின் உறுப்பினராக ரிஉந்தவர். மேலும் காந்திரஸ் கட்சியின் மத்திய அமைச்சராகப் பதவி வகித்து பின் நாளில் விமான விபத்தில் பலியானார். இவரின் மகன் ஜோதிராதித்ய மாதவ் ராவ் சிந்தியா, மத்திய பிரதேசத்தின் குனா தொகுதியின் எம்.பி- ஆக உள்ளார்.

6. நந்தினி சத்பதி

satpathy

ஒடிசா மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக பதிவியின் இருந்தவர் நந்தினி சத்பதி. 1972ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1976ம் ஆண்டு டிசம்பர் வரை பதியில் நீடித்தவர். இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த காலத்தில் நந்தினி மத்திய ஒளிப்பரப்புத்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நந்தினியின் கணவரான தேவேந்திர சத்பதி, ஒடிசா மாநிலத்தின் மத்திய அமைச்சராக இருந்தவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. ஒருவர் நச்சிகேத்தா மற்றும் தத்தாகட்டா சத்பதி. இளைய மகன் தத்தாகட்டா தென்கனால் தொகுதியைச் சேர்ந்தவர்.

7. மேனகா காந்தி

maneka-gandhi

மறைந்த முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மருமகள் மேனகா காந்தி. இவர் 7வது முறையாக மத்திய அமைச்சர் பதிவியில் உள்ளார். மேலும், தற்போதுள்ள நரேந்திர மோடியின் அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவரின் கணவர் சஞ்சய் காந்தி 1980ம் ஆண்டில் அமேத்தி தொகுதியை வென்றார் ஆனால் பதவியேற்ற 5 மாதத்திலேயே விமான விபத்தில் உயிரிழந்தார். இவர்களின் ஒரே மகன் வருண் காந்தி தற்போது லோக் சபா உறுப்பினராக உள்ளார் மற்றும் சுல்தான்பூர் தொகுதியைச் சார்ந்தவர். தன் தாயை போலவே வருண் காந்தியும் பாஜக கட்சியை சேர்ந்தவர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:From indira gandhi to sheila dikshit here are some powerful politician moms

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X