வரும் கல்வியாண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
10% இடஒதுக்கீடு அமல்:
பொருளாதரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10% சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக, பல்கலைக்கழகங்களில் 25 சதவீத இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் இதற்காக நீண்ட விவாதம் நடைபெற்றது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 10% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்கினார். .
இதன்மூலம் ஆண்டிற்கு ரூ.8 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்போர், நகர்ப் பகுதியில் 900 சதுர அடிக்கு குறைவான வீடு உள்ளோர் 10% இடஒதுக்கீட்டைப் பெற்று பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டது
எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு உள்ள இட ஒதுக்கீட்டுக்கு இடையூறு நேராத வகையில் பத்து சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமலுக்கு வருகிறது.
நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , பல்கலைக்கழகங்களில் 2019-20 கல்வியாண்டு முதல் 25 சதவீத இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 900 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40000 கல்லூரிகளுக்கு இது தொடர்பாக அடுத்த ஒரு வாரத்துக்குள் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.கல்லூரி பல்கலைக்கழகங்கள் பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த ஏதாவது தங்கள் கல்வி நிறுவன அட்டவணையில் இது தொடர்பான விவரத்தை தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.
சுயநிதியில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகங்களும் இச்சட்டத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 40 ஆயிரம் கல்லூரிகளிலும் 900 பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட இருப்பதாகவும், இந்த இட ஒதுக்கீட்டால் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு நன்மை கிடைக்கும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலித்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டதை அடுத்து, குஜராத்தில் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளது. குஜராத்தை பின்பற்றி ஜார்க்கண்ட் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்கள் இச்சட்டத்தை அமல்படுத்த உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.