Advertisment

முதல் தேர்தலில் ரூ.25,000 முதல் தற்போது ரூ.95 லட்சம் வரை: மக்களவை வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்?

பொதுக் கூட்டங்கள், பேரணிகள், விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் வாகனங்கள் உட்பட தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வேட்பாளர் சட்டப்பூர்வமாகச் செலவிட அனுமதிக்கப்பட்ட தொகையை செலவு வரம்பு குறிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha

From Rs 25,000 in first polls to Rs 95 lakh now: What Lok Sabha candidates can ‘officially’ spend

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொதுத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கட்சிகள் மற்றும் தனிப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை, அதன் சொந்த பார்வையாளர்கள், மாநில மற்றும் மத்திய அமலாக்க முகமைகள் மூலம் கண்காணிப்பது, தேர்தல் ஆணையத்தின் (EC) முக்கிய பொறுப்புகளில் ஒன்று.

Advertisment

கட்சிகள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றாலும், வேட்பாளர்கள் மக்களவைத் தொகுதிகளுக்கு ரூ.95 லட்சமும், சட்டமன்றத் தொகுதிகளுக்கு ரூ.40 லட்சமும் மட்டுமே செலவு செய்யலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளனது. சில சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு முறையே ரூ.75 லட்சம் மற்றும் ரூ.28 லட்சமாக உள்ளது.

லோக்சபா வேட்பாளர்களுக்கு ரூ.70 லட்சமாகவும், சட்டசபை வேட்பாளர்களுக்கு ரூ.28 லட்சமாகவும் இருந்த 2019ம் ஆண்டு முதல் செலவு வரம்புகள் பல ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொதுக் கூட்டங்கள், பேரணிகள், விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் வாகனங்கள் உட்பட தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வேட்பாளர் சட்டப்பூர்வமாகச் செலவிட அனுமதிக்கப்பட்ட தொகையை செலவு வரம்பு குறிக்கிறது. அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் தங்கள் செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பெரும்பாலும் செலவு காரணிகள் மற்றும் அதிகரித்து வரும் வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் ஆணையம் அடிக்கடி செலவு வரம்பை திருத்துகிறது.

கடந்த 2022ல், உச்சவரம்பு திருத்தப்பட்டபோது, ​​தேர்தல் ஆணையம் ஒரு குழுவை அமைத்து, அரசியல் கட்சிகள், தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடமிருந்து ஆலோசனைகளை கேட்டது. மேலும் 2014 முதல் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் செலவு பணவீக்கக் குறியீட்டில் கணிசமான அதிகரிப்பு இருப்பதைக் கண்டறிந்தது.

பணவீக்கம் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு பொருட்கள் மற்றும் சொத்துக்களின் விலைகள் அதிகரிப்பதை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் செலவுப் பணவீக்கக் குறியீடு (CFI) - 2014-15 இல் '240' ஆக இருந்து 2021-22 இல் '317' ஆக உயர்ந்துள்ளது.

1951-52 முதல் பொதுத் தேர்தலில், மக்களவை வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.25,000 மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10,000 மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு வரை வரம்புகள் மாற்றப்படவில்லை, பிறகு பெரும்பாலான மாநிலங்களில் செலவு வரம்பு ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டது.

1980ல், இந்த வரம்பு மீண்டும் ஒரு வேட்பாளருக்கு ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டது. 1984ல் சில மாநிலங்களில் ரூ.1.5 லட்சமாகவும், சில சிறிய மாநிலங்களில் ரூ.1.3 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.

ஒன்று முதல் இரண்டு லோக்சபா இடங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு, உச்சவரம்பு ரூ.1 லட்சம் ஆகவும், சண்டிகர் போன்ற சில யூனியன் பிரதேசங்கள் வெறும் ரூ. 50,000 மட்டுமே செலவு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

விளக்கப்படம்: மக்களவை வேட்பாளர்களுக்கான செலவு வரம்பு

Lok Sabhaஅடுத்த மாற்றம் 1996 இல் வந்தது, தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய தேர்தலில், பெரும்பாலான மாநிலங்களுக்கான வரம்பு மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு ரூ. 4.5 லட்சமாக இருந்தது, யூனியன் பிரதேசத்தின் நிலை மற்றும் இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபாடுகளுடன்.

அடுத்த தேர்தலில், 1998ல், செலவு வரம்பு, இன்னும் அதிகமாக 15 லட்சமாக உயர்த்தப்பட்டது. 2004ல் மீண்டும் ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில், இந்த வரம்பு மாறாமல் இருந்தது, பின்னர் 2014 இல் அது இருமடங்காக அதிகரித்து ரூ.70 லட்சமாக இருந்தது. 2019 தேர்தலுக்குப் பிறகு, 2022ல், தற்போதைய புள்ளிவிவரங்களுக்கு செலவு வரம்பு உயர்த்தப்பட்டது.

மாவட்ட அளவில், மாநில தேர்தல் ஆணையம், வேட்பாளர்களுக்கான தங்குமிடங்கள், போக்குவரத்து முதல் கூடாரம், மாலைகள், கொடிகள் மற்றும் பேரணிகளுக்கான உணவுகள் வரை தேர்தல் செலவினங்களுக்கான பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிடுகிறது. பெரும்பாலான மாவட்டங்கள் இன்னும் தங்கள் இணையதளங்களில் கட்டணப் பட்டியலை வெளியிடாத நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், பேனா மற்றும் கத்தரிக்கோல் போன்ற அடிப்படை ஸ்டேஷனரி பொருட்களுக்குக் கூட வரம்புகள் உள்ளன.

அதிகாரிகள் உணவுக்கான விரிவான கட்டணப் பட்டியலைக் கூட வெளியிடுகிறார்கள் - ஜபல்பூர் மாவட்டத்தில், டீ அல்லது காபி மற்றும் பிஸ்கட் ஒருவருக்கு  ரூ.7க்கு மேல் செலவிடக்கூடாது, தாலி சாப்பாடு ரூ.97 வரை மட்டுமே செலவிட வேண்டும்.

கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்காக அதிக தொகையை செலவு செய்கின்றன. 2019 ஆம் ஆண்டில், தேர்தலின் போது 32 தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக செலவழித்த மொத்தம் ரூ.2,994 கோடியில், ரூ.529 கோடி மொத்தமாக வேட்பாளர்களுக்குச் சென்றது.

2014 ஆம் ஆண்டில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில், ஐந்து தேசியக் கட்சிகளில் இருந்து வெற்றி பெற்ற 342 வேட்பாளர்கள் இணைந்து 75.6 கோடி ரூபாய் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், ஆறு தேசியக் கட்சிகளைச் சேர்ந்த 388 எம்.பி.க்கள் மொத்தம் ரூ.14.2 கோடி பெற்றதாகக் கூறியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் விரிவான தேர்தல் செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.   

Read in English: From Rs 25,000 in first polls to Rs 95 lakh now: What Lok Sabha candidates can ‘officially’ spend

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment