இந்தியாவுக்கு உதவி செய்ய பூட்டான் முன்வந்துள்ளது. 1960-களில் இருந்து 5 ஆண்டு திட்டங்களுக்கு உதவுவதிலிருந்து, 2007 வெள்ளம் மற்றும் 2009 பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளின்போதும், கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது எழுச்சி இந்தியாவின் சுகாதார அமைப்பை மூழ்கடித்து மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தபோதும், இந்த சிறிய இமயமலை தேசம் அதன் வலிமைமிக்க அண்டை நாட்டை மீட்க வந்துள்ளது.
மாநில சுகாதார அமைச்சரின் யோசனை முதல் தென் தொகுதியின் தலையீடு வரை, பூட்டானிய மன்னரின் தனிப்பட்ட கவனத்திற்கு இந்திய தூதரின் உடனடி அணுகுமுறையிலிருந்து, இது மாநிலங்கள், மையம், தூதரகம் மற்றும் வெளிநாடு ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பின் கதை.
இந்தியாவுக்கு ஒவ்வொரு நாளும் 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்கும் அதாவது 10,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு சமம். இது அடுத்த மாதம் பூட்டானிலிருந்து கொடுக்கப்படும் என்கிற செய்தியைப் பற்றி இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளுடன் சண்டே எக்ஸ்பிரஸ் பேசியது.
ஏப்ரல் 25-ம் தேதி, அஸ்ஸாம் சுகாதார அமைச்சரும், மாநிலத்தின் புதிய முதல்வருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா, குவஹாத்தியை தளமாகக் கொண்ட மேகாலயா ஆக்ஸிஜன் நிறுவனத்தின் இயக்குநர் பிரவீன் ஜெயினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 7 கி.மீ. அசாமின் பக்ஸா மாவட்டத்திற்கு எதிரே உள்ள கிழக்கு பூட்டானிய மாவட்டமான சம்த்ரூப் ஜொங்கரில் அவர்களின் கூட்டு முயற்சி திட்டம் பற்றி உரையாடினர். இந்த உரையாடலின் போது, பூட்டானில் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கான அவர்களின் திட்டங்கள் அண்டை நாட்டில் தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்தப்பட்டதாக ஜெயின் குறிப்பிட்டார்.
அந்த நேரத்தில், அசாம் தினசரி 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட கோவிட் -19 பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் புகாரளித்தது. இரண்டாவது அலையின் தாக்கம், வடகிழக்கில் இன்னும் தொலைவிலிருந்தது.
ஆனால், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நிலைமை கடுமையாக இருந்தது. சிறந்த மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் வழங்கல் பற்றாக்குறையை எதிர்கொண்டன. இது, பல நோயாளிகளின் மரணத்திற்கு வழிவகுத்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர்களுக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறப்பட்டது.
டெல்லியில், ஏப்ரல் 25 அன்று, அந்த நாளில் 22,000 பேர் பாதிக்கப்படும் எண்ணிக்கையைக் கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது, கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அசாமுக்கு மட்டுமல்ல, பிராந்தியத்தில் உள்ள பிற மாநிலங்களுக்கும் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகரிக்கும் வாய்ப்பை சர்மா உணர்ந்தார். அவர் உடனடியாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை அழைத்து பூட்டானிலிருந்து திரவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கான சாத்தியத்தை இந்தியா ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜெய்சங்கரின் அறிவுறுத்தலின் பேரில், பூட்டானுக்கான இந்தியத் தூதர் ருச்சிரா கம்போஜ், நாட்டின் உயர்மட்டத் தலைமையுடன் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். சர்மாவும் கம்போஜுக்கு விளக்கினார்.
பூட்டான் மன்னன் ஜிக்மே கேசர் நம்கீல் வாங்சக் அல்லது கே 5-உடன் கம்போஜின் தனிப்பட்ட அணுகல் மற்றும் நல்லுறவு, அவர் பிரபலமாக அறியப்பட்டிருப்பதாகவும் மற்ற வேலைப்பாடுகள் யாவும் வேகமாக நகர்த்த உதவியதாகவும் இருந்தன என வட்டாரங்கள் தெரிவித்தன.
"மன்னர் உடனடியாக ஓர் அரசாணையுடன் பதிலளித்தார். பிறகு, ஒரு மணி நேரத்திற்குள் எஸ் டி கிரையோஜெனிக்ஸ் வாயுக்களின் ஆக்ஸிஜன் ஆலையை அமைப்பதற்கு பூட்டானிய அதிகாரிகளால் அனைத்து ஒப்புதல்களும் வழங்கப்பட்டன" என்று ஒரு அதிகாரி தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
"கடுமையான உடல்நலம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஒப்புதல் இருப்பதாக அந்த அதிகாரி கூறினார். அன்று மாலைக்குள்ளேயே, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது"
அந்த நேரத்தில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக டேட்டா டாஷ்போர்டின்படி, பூட்டான் ஒரு நாளைக்கு நான்கு புதிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருந்தது.
நிகழ்வுகளின் வரிசையை உறுதிப்படுத்திய சர்மா, “ஆக்ஸிஜன் ஆலை அடுத்த மாதம் தொடங்கப்படும்” என்று தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இந்த ஆக்சிஜன் மணிப்பூருக்கும் வழங்கப்படும். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று, ஜெய்ஷங்கர், கம்போஜ் மற்றும் பூட்டானின் மன்னர் ஆகியோருக்கு இந்த யோசனையை வழிநடத்திச் சென்றதுக்கு சர்மா நன்றி தெரிவித்தார்.
இந்த ஆலை ஒரு நாளைக்கு சுமார் 40 மெட்ரிக் திரவ ஆக்ஸிஜனை (சுமார் 10,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு சமம்) வழங்கும். இது, கிரையோஜெனிக் டேங்கர்களில் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும். மேலும், அடுத்த மாதம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூட்டான் மன்னர் அதன் முன்னேற்றத்தைத் தனிப்பட்ட முறையில் கண்காணித்து, இந்தியாவின் எல்லையில் உள்ள பூட்டானில் உள்ள மோட்டங்கா தொழில்துறை பூங்காவைப் பார்வையிட்டார்.
“பூட்டானின் பதில், உடனடி ஆதரவாக இருந்தது. இது பூட்டானில் இந்தியாவுக்கு இருக்கும் மகத்தான நல்லெண்ணத்தின் பிரதிபலிப்பு. இந்தியாவுக்கான ஒரு முக்கியமான கட்டத்தில் இதை சாத்தியமாக்கிய மன்னருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்” என்று கம்போஜ் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
"கோவிட் -19 தொடங்கியதிலிருந்து, இந்தியா பூட்டானுடன் உறுதியுடன் நிற்கிறது. அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் தடையின்றி வழங்குவதை உறுதிசெய்கிறது. ஐந்து புதிய வர்த்தக பாதைகளைத் திறக்கிறது மற்றும் மருத்துவ பொருட்கள், உபகரணங்கள், தடுப்பூசிகளை வழங்குகின்றது" என்று அந்த அதிகாரி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.