ஹத்ராஸ் வழக்கில் உயிரிழந்த 19 வயது பெண் சிகிச்சைப் பெற்று வந்த அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் முதன்மை மருத்துவ அதிகாரி, ”வெளியான ஃபாரசிக் அறிக்கைக்கு எந்த மதிப்பும் இல்லை” என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.
வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறும் அந்த பெண்ணின் உடலில் இருந்து மாதிரிகள், சம்பவம் நடைபெற்று 11 நாட்களுக்கு பிறகு தான் எடுக்கப்பட்டது. ஆனால் அரசின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின் படி இது போன்ற குற்ற நிகழ்வுகள் நடைபெற்று 96 மணி நேரத்தில் தான் ஆதாரங்கள் மூலமாக அது பாலியல் வன்கொடுமையா என்று கண்டறியமுடியும். இந்த அறிக்கையால் அது பாலியல் வன்கொடுமை என்று கூறிவிட இயலாது என்று மருத்துவர் அஜீம் மாலிக், முதன்மை மருத்துவ அதிகாரி, இந்தியன் எக்ஸ்பிரஸில் கூறினார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
செப்டம்பர் 14ம் தேதியன்று, நான்கு உயர்சாதி ஆண்களால் கற்பழிக்கப்பட்டார் என்று கூறப்படும் தாக்குதலுக்கு ஆளான அந்த பெண், தன்னுடைய சுயநினைவை பெற்றவுடன் செப்டம்பர் 22ம் தேதி அன்று தான் பாலியல் புகார் குறித்து விபரங்களை அழித்தார். அவருடைய வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட்ட பிறகு, பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டது.
தாக்குதல் நடைப்பெற்ற 11 நாட்கள் கழித்து, செப்டம்பர் 25ம் தேதி அன்று அவரது அறிக்கையை தொடர்ந்து அவரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தான் உ.பி, காவல்துறையினர், இப்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்று கூறினர். வியாழக்கிழமை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி ப்ரஷாந்த் குமார், செய்தியாளர்கள் சந்திப்பில் “தடயவியல் அறிக்கைப்படி உள்ளுறுப்பு மாதிரிகளில் விந்துக்கள் அல்லது விந்து சுரப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை, மரணத்திற்கு காரணம் தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சி தான் என்று கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இருந்த போதிலும் தவறான செய்திகள் ஊடங்களில் பரப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அக்டோபர் மூன்றாம் தேதி, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை, ஹத்ராஸில் இருக்கும் சதாபாத் சர்க்கிள் அலுவலருக்கு, உங்களின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையிலான இறுதி கருத்து என்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் உடல் உறவுக்கான எந்த விதமான அறிகுறிகளும் இல்லை என்று குறிப்பிட்டு, துணை பேராசிரியர் மருத்துவர் ஃபைஸ் அகமது மற்றும் சேர்மன் மருத்துவர் சயீத் ஆகியோர் கையப்பமிட்டு, எஃப்.எஸ்.எல் அறிக்கையையும் அனுப்பியுள்ளனர். மேலும் கழுத்து மற்றும் பின்புறம் காயங்கள் உள்ளதை மேற்கோள்காட்டி, உடல் ரீதியான துன்புறுத்தகள் இருந்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் ரெசிடெண்ட் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹம்ஸா மாலிக், எஃப்.எஸ்.எல் அறிக்கையை “நம்பமுடியாதது” என்று கூறியுள்ளார். "11 நாட்களுக்குப் பிறகு கற்பழிப்புக்கான ஆதாரங்களை எஃப்.எஸ்.எல் குழு எவ்வாறு கண்டுபிடிக்கும்? 2-3 நாட்களுக்குப் பிறகு விந்துக்கள் உயிர்வாழாது. அவர்கள் முடி, உடைகள், நகங்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுத்தார்கள். சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் மாதவிடாய் காரணமாக மாதிரிகள் சோதனை விந்து இருப்பதைக் காட்டாது. ”
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
செப்டம்பர் 22ம் தேதி மருத்துவர் ஒருவர் அப்பெண்ணிடம் மருத்துவ சட்ட விசாரணை மேற்கொண்டு, ஆரம்ப கட்ட மருத்துவ சோதனையின் அடிப்படையில் ஒரு தற்காலிக கருத்தினை வழங்கினார். அதில், அவர் மீது பலத்தை பிரயோகித்ததற்கான அறிகுறிகள் இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால் எஃப்.எஸ்.எல் அறிக்கை ஏதும் வராத காரணத்தால் பாலியல் வன்புணர்வு தொடர்பாக அறிக்கை ஏதும் தரவில்லை. செப்டம்பர் 22ம் தேதி அறிக்கையில், அப்பெண் தந்த விபரங்களின் அடிப்படையில், உடலுறவுக்கான அறிகுறிகள் இருந்தது என்று கூறப்பட்டது.
அப்பெண்ணின் வாக்குமூலம் அடிப்படையில் அப்பெண்ணின் வாய் துணியால் மூடினார்கள், துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்தனர் என்றும் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தது. கொலைக்கான அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த தாக்குதலை நடத்தியவர்களின் பெயர்களாக சந்தீப், ராமு, லவ் குஷ், மற்றும் ரவி ஆகியோரின் பெயர்கள் இணைக்கப்பட்டிருந்தது. சஃப்தர்தங் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை முடிகள் கூட, அவரின் கன்னித்திரையிலும் குத துவாரத்திலும் பல்வேறு பழைய, ஆறிய காயங்களும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.