உணவு ஒழுங்குமுறை அமைப்பான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து தகவல் லேபிளிங்கில் மாற்றங்களை செய்ய உத்தரவிட்டது. மொத்த உப்பு (total salt), சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) ஆகியவை குறித்த தகவல்களை பெரிய எழுத்துகளில் bold-ஆக எழுத வேண்டும் எனக் கூறியுள்ளது.
எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இது குறித்த வரைவு அறிவிப்பை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டது. ஊட்டச்சத்து தகவல் லேபிளிங் தொடர்பான உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (லேபிளிங் மற்றும் டிஸ்பிளே) விதிமுறைகள், 2020ல் திருத்தம் செய்வதற்கு FSSAI-ன் தலைவர் அபூர்வ சந்திரா தலைமையில் நடைபெற்ற உணவு ஆணையத்தின் 44-வது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
"இந்த திருத்தம் நுகர்வோர் உட்கொள்ளும் பொருளின் ஊட்டச்சத்து மதிப்பை நன்கு புரிந்துகொள்வதற்கும் ஆரோக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கூறியது.
மேலும், இந்த வரைவு அறிவிப்பு பொது மக்கள் கருத்துக்காக பொது தளத்தில் வைக்கப்படுகிறது. உணவு பொருட்களில் சேவை சதவீதம் (%) பங்களிப்பு தொடர்பான தகவல்கள், மொத்த சர்க்கரை, மொத்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கு பெரிய எழுத்துக்களில் கொடுக்கப்பட வேண்டும் என்றும் FSSAI தெரிவித்துள்ளது.
FSS (லேபிளிங் மற்றும் டிஸ்பிளே) ஒழுங்குமுறை, 2020-ன் ஒழுங்குமுறை 2 (v) மற்றும் 5(3) ஆகியவை உணவுப் பொருட்களின் லேபிளில் முறையே பரிமாறும் அளவு மற்றும் ஊட்டச்சத்து தகவல்களைக் குறிப்பிடுவதற்கான தேவைகளைக் குறிப்பிடுகிறது என்று கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: FSSAI to make mandatory labelling of salt, sugar, fat on packaged food items in bold letters, bigger font
மேலும், ‘100% பழச்சாறுகள்’ என்று லேபிள்கள் மற்றும் விளம்பரப்படுத்தப்படும் எந்தவொன்றும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என உணவு வணிக ஆபரேட்டர்களை (FBOs) கேட்டுக் கொண்டது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வர்த்தக அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள்; மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“