இந்நிலையில் நேற்று பெட்ரோல் 60 காசுகளும், டீசல் 56 காசுகளும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தில் வெளியான தகவல் உண்மையில்லை என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 7 பைசா குறைந்துள்ளது என்றும், டீசல் 5 பைசா குறைந்துள்ளது என்று விலை நிலவரம் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 டாலர்கள் வரை குறைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலை மிக சொற்பமான அளவில் குறைப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.