scorecardresearch

காங்கிரஸில் இருந்து விலகிய கபில் சிபல்: அடுத்த இலக்கு பற்றி பேட்டி

Kapil Sibal resigned from the Congress party; his latest interview in tamil: காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், “மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றி, இந்தியாவின் கலாச்சாரத்தை பிளவுபடுத்தும் தற்போதைய பாஜக ஆட்சியை எதிர்க்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே எனது எதிர்காலத் திட்டம்” என்று கூறியுள்ளார்.

Future plans are to unite opposition to oppose BJP says Kapil Sibal after announcing resignation from congress party
Former Congress leader Kapil Sibal.

Former Congress leader Kapil Sibal interview in tamil: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், மே 16ஆம் தேதி அன்று தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாகவும், உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக தான் போட்டியிடுவதாகவும் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ராஜினாமாவை அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றி, இந்தியாவின் கலாச்சாரத்தை பிளவுபடுத்தும் தற்போதைய பாஜக ஆட்சியை எதிர்க்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே எனது எதிர்காலத் திட்டம்” என்று கூறியுள்ளார்.

அவரது பேட்டி சுருக்கமாக…

கேள்வி: காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்துவிட்டீர்களா?

கபில் சிபல்: ஆம், நான் மே 16 ஆம் தேதி காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தேன். காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன்.

கேள்வி: இந்த முடிவை எடுக்க உங்களைத் தூண்டியது எது?

கபில் சிபல்: இந்த நேரத்தில் நான் அது பற்றி பேச விரும்பவில்லை

கேள்வி: சமாஜ்வாதி கட்சியில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளீர்களா?

கபில் சிபல்: இல்லை, நான் அப்படி செய்யவில்லை. சுயேச்சை வேட்பாளராக நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். சமாஜ்வாடி கட்சி எனக்கு ஆதரவு அளித்துள்ளது.

கேள்வி: சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துள்ளீர்களா?

கபில் சிபல்: நிச்சயமாக இல்லை. அப்படி இருந்தால் நான் எப்படி சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்? நான் வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் என்று பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் எனது பொது நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு, நான் அறிவித்ததைச் செய்துள்ளேன். நிச்சயமாக, ஒரு சுயேட்சை உறுப்பினராக, நான் நாட்டில் சுதந்திரக் குரலாக இருப்பேன் என்று நம்புகிறேன்.

கேள்வி: உங்கள் எதிர்கால திட்டங்கள்?

கபில் சிபல்: மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றி, இந்தியாவை உள்ளடக்கிய கலாச்சாரத்தைப் பிளவுபடுத்தும் தற்போதைய பாஜக ஆட்சியை எதிர்க்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே எனது எதிர்காலத் திட்டம்.

கேள்வி: இதையெல்லாம் செய்ய காங்கிரஸ் கட்சி ஏன் சிறந்த கட்சி இல்லை என்று நினைக்கிறீர்கள்?

கபில் சிபல்: எல்லோரும். அனைத்து எதிர்க்கட்சிகளும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்

கேள்வி: நீங்கள் காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்

கபில் சிபல்: நான் இப்போது பேச விரும்பாத காரணங்களுக்காக காங்கிரஸுடனான எனது உறவை முறித்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்துள்ளேன். இப்போது நான் காங்கிரஸ் கட்சியில் இல்லாததால், நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் கலாச்சாரத்திற்கு முரணான, எதிர்மறையான எதையும் கூற விரும்பவில்லை. காங்கிரஸுக்குள், நான் சொல்ல விரும்புவதை என்னால் சொல்ல முடியும். இப்போது நான் காங்கிரஸில் இல்லாததால் காங்கிரஸில் உள்ள யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை.

கேள்வி: ஜி 23 இன் ஒரு பகுதியாக நீங்கள் காங்கிரஸில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்தீர்கள்

கபில் சிபல்: நான் காங்கிரஸ் கட்சியில் இல்லாததால் அது எதற்கும் இப்போது பதிலளிக்கப் போவதில்லை.

கேள்வி: மற்ற ஜி 23 உறுப்பினர்களுக்கு உங்கள் பதில்

கபில் சிபல்: யாருக்கும் பதிலளிக்கப் போவதில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Future plans are to unite opposition to oppose bjp says kapil sibal after announcing resignation from congress party