Advertisment

ஜி-7 மாநாடு; ‘ஒரு உலகம், ஒரு ஆரோக்கியம்’ என்ற கருத்தில் திறந்த தடுப்பூசி திட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

G-7: PM calls for open vaccine chains, ‘one world, one health’: காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஜி -7 மாநாட்டில் உரையாற்றிய மோடி, உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

author-image
WebDesk
New Update
ஜி-7 மாநாடு; ‘ஒரு உலகம், ஒரு ஆரோக்கியம்’ என்ற கருத்தில் திறந்த தடுப்பூசி திட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

சனிக்கிழமை நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி "உலகளாவிய ஒற்றுமை, தலைமை மற்றும் பொறுப்புக்கு" அழைப்பு விடுத்ததோடு, "எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பது, ஜனநாயக மற்றும் வெளிப்படையான சமூகங்களின் சிறப்பு பொறுப்பு" என்பதையும் வலியுறுத்தினார்.

Advertisment

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஜி -7 மாநாட்டில் உரையாற்றிய மோடி, உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

கொரோனா பரவலைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாத சீனாவின் போக்கு மற்றும் உலக சுகாதார அமைப்பின் மோசமான தலைமை ஆகியவை உலகத்தை மூழ்கடித்துள்ளது.

ஆதாரங்களின்படி, "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்" அணுகுமுறை இருக்க வேண்டும் என்று மோடி கூறினார், இதற்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் ஆதரவு தெரிவித்தார். "தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்த உதவும் தடுப்பூசி மூலப்பொருட்கள் மற்றும் கூறுகளுக்கான திறந்த விநியோக சங்கிலிகளை வைத்திருப்பதில் இந்தியாவின் முக்கியத்துவம் பரவலான ஆதரவைப் பெற்றது" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பிரெஞ்சு ஜனாதிபதி இமான்னுவேல் மெக்ரோன் ஆதரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஆதரவு வந்தது.

‘பில்டிங் பேக் ஸ்ட்ராங்கர் - ஹெல்த்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வு, தொற்றுநோயிலிருந்து உலகளாவிய மீட்சி மற்றும் எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிரான பின்னடைவை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியது.

“இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பிடம் அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தக தொடர்பான அம்சங்களில் கொரோனா தொடர்பான தொழில்நுட்பங்களை தள்ளுபடி செய்வதற்காக நகர்த்தப்பட்ட ஒரு திட்டத்திற்கு ஜி -7 நாடுகளின் ஆதரவை மோடி நாடினார். இதற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் பலர் வலுவாக முன்வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் “முழு சமூகமும்” அணுகுமுறையை பிரதமர் எடுத்துரைத்தார். இது அரசாங்கம், தொழில்துறை மற்றும் சிவில் சமூகத்தின் அனைத்து மட்டங்களின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்து தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் அணுகுமுறையாகும்.

தொடர்புத் தடமறிதல் மற்றும் தடுப்பூசி மேலாண்மைக்கு இந்தியாவின் திறந்த வெளி டிஜிட்டல் கருவிகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதையும் அவர் விளக்கினார், மேலும் அதன் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பிற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இந்தியாவில் கோவிட் தொற்றுநோய்களின் போது ஜி -7 மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து ஜி -7 உச்சி மாநாட்டின் வெளிச்செல்லும் கூறுகளில் கலந்து கொள்ள மோடியை அழைத்திருந்தார். மோடி ஞாயிற்றுக்கிழமை மேலும் இரண்டு அமர்வுகளில் பேசவுள்ளார்.

சனிக்கிழமையன்று, ஜி -7 தலைவர்கள் எதிர்கால தொற்றுநோய் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்ட 100 நாட்களுக்குள் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் நோயறிதல்களைக் கொண்ட ஒரு லட்சிய நோக்கமான ‘100 நாட்கள் மிஷன்’ பற்றி விவாதிக்கின்றனர்.

கார்பிஸ் விரிகுடா உச்சி மாநாட்டில் இங்கிலாந்து அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் மற்றும் மெலின்டா பிரஞ்சு கேட்ஸ் ஆகியோர், எதிர்கால தொற்று அச்சுறுத்தல்களுக்கு உலகின் செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கங்கள், தொழில், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிறர் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் எனபது குறித்து உரையாற்றுவார்கள்.

உடல்நலம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார பின்னடைவு குறித்து ஜி -7 உடன் இந்தியா நெருக்கமாக ஈடுபட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘மீண்டும் கட்டியெழுப்புதல்’ என்றாலும், இங்கிலாந்து அதன் தலைமைக்கு நான்கு முன்னுரிமைப் பகுதிகளை கோடிட்டுக் காட்டியுள்ளது: எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிரான பின்னடைவை வலுப்படுத்தும் அதே நேரத்தில் தொற்றுநோயிலிருந்து உலகளாவிய மீட்சிக்கு வழிவகுத்தல்; சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை வென்றெடுப்பதன் மூலம் எதிர்கால செழிப்பை ஊக்குவித்தல்; காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் புவியின் பல்லுயிரியலைப் பாதுகாத்தல்; மற்றும் மதிப்பான கருத்துக்களை பகிர்தல் மற்றும் திறந்த சமூக செயல்பாடு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi India Corona Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment