புதுச்சேரியில் செய்தியாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், “ஆர்எஸ்எஸ் விழாக்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் இந்த உத்தரவு என்பது நேரடியாக அரசு நிர்வாகமே ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் போகக்கூடிய ஆபத்தை உருவாக்கும்” என்றார்.
தொடர்ந்து, “மத்திய-மாநில அரசுகள் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழகத்தைப் போல புதுச்சேரி அரசும் நெல் கொள்முதலை நேரடியாக விவசாயிகளிடம் செய்ய வேண்டும்” என கூறினார்.
மேலும், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதுடன் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய ஜி ராமகிருஷ்ணன்,
நிதி ஆணையம் மூலம் மாநிலங்களுக்கு நிதி வழங்குவது வெட்டப்படுகிறது, குறைக்கப்படுகிறது என கூட்டாட்சி என்பது குற்றஞ்சாட்டினார்.
மத்திய அரசு ஒட்டுமொத்த வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“