Advertisment

ஜி20 உச்சிமாநாட்டின் ஊடக அறை : அரசியல் மோதலை தொடரும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா

உலகெங்கிலும் இருந்து இந்தியா வந்த 2,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நேற்று காலை சர்வதேச ஊடக மையத்திற்கு வந்தனர்

author-image
WebDesk
New Update
g20 Summit Journalit Room

ஜி20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தில் சர்வதேச ஊடக மையம்

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கிய ப20 உச்சி மாநாடு தொடர்பான செயதிகளை பெறுவதற்காக உலகெங்கிலும் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கு அதிகமாக பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் இந்தியா வந்துள்ளனர். இவர்களுக்காக ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் சர்வதேச ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் இருந்து இந்தியா வந்த 2,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நேற்று (சனிக்கிழமை) காலை சர்வதேச ஊடக மையத்தை நெருங்கினர். இதில் சிலர் தங்கள் லேப்டாப் மூலம் செய்திகள் அனுப்புவதிலும், மற்றவர்கள் உச்சிமாநாட்டைப் பற்றி கேமரா முன்பு லைவ் மூலம் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் தங்கள் நாட்டு சக ஊழியர்களுடன் காபி குடித்துக்கொண்டு இடைவேளை நேரத்தை கழித்துக்கொண்டிருந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியளாளர்கள் அனைவரும் டெல்லியில் இரண்டு நாள் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு தொடர்பான செய்திகளை சேகரிக்க வந்துள்ளனர். இதனால் அவர்களிடம் இருந்து பொழுதுபோக்கான செயல்களை பார்ப்பது அரிதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

modi

அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து தலா 150க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், சீனாவில் இருந்து சுமார் 50 ஊடகவியலாளர்கள், ஆப்பிரிக்க நாடுகள், ஜப்பான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏசி வசதியுடன் அமைக்கப்பட்ட இந்த ஊடக மையத்தில் நீண்ட பயணத்திற்கு தயாராகும் பத்திரிகையாளர்களுக்காக நிறைய கேன் தண்ணீர், கோக் மற்றும் சூடான பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்த பத்திரிக்கையாளர் குழுக்கள் இடையேயான தொலைதூர பயணம் அவர்களை சோர்வடைய செய்தது தெரிந்தது. தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவில் பரிமாறப்படும் இந்திய சைவ உணவைப் பற்றி சிறிய குறிப்புகள் பரிமாறப்பட்டன. ரஷ்ய, ஆஸ்திரேலிய மற்றும் ஜெர்மன் பத்திரிகையாளர்களின் குழுக்கள் ஒருவருக்கொருவர் சில மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்தனர். ஆனால் ஒவ்வொரு குழுவையும் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நேற்று (சனிக்கிழமை) மதியம் வரை ஒருவருக்கொருவர் பேசவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.

மேலும் உடகவியளாளர்களில் சிலர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு தாமதமாக வந்ததாலும், சிலர் வேலையில் மும்முரமாக இருந்ததாலும் சரியாக பேசவில்லை என்று கூறினர். அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ஊடக அறை முழுவதும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கும் ரஷ்ய அல்லது சீன ஊடகவியலாளர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் ஏற்படவில்லை என்று, ஆஸ்திரேலியா பணியகத்தின் தலைவரும், நியூயார்க் டைம்ஸின் சர்வதேச நிருபருமான டேமியன் கேவ், இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறினார்.

Modi Joebiden

மேலும் உச்சிமாநாட்டின் போது ரஷ்யா அல்லது சீனாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு மற்றும் அவர்கள் ஒரே ஊடக அறை மற்றும் சாப்பாட்டு இடத்தைப் பகிர்ந்து கொண்டாலும், ஒருவருக்கொருவர் எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. எனது அனுபவத்தில், உச்சிமாநாடுகளின் போது சாதாரண தொடர்புகள் குறைவாகவே காணப்படுகின்றன, ஆனால் இயற்கை பேரழிவுகள் போன்ற நிகழ்வுகளை உள்ளடக்கும் போது, குழப்பமான சூழ்நிலையை அனைவரும் உணர முயலும் போது அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்," என்று அவர் கூறினார்,

புவிசார் அரசியல் நிகழ்வுகள் செய்தியாளர்களை பிஸியாக வைத்திருக்கும். அவர்களின் தேசிய பார்வையாளர்களுக்கு அனைத்து நிகழ்வுகளையும் கவரேஜ் செய்ய முயற்சிப்பார்கள். அந்த வகையில், உச்சிமாநாடு தொடர்பான அம்சங்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் குறித்து ரஷ்ய பத்திரிகையாளர்களை இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் நேர்காணல் செய்வதை இங்கு காண முடிந்தது. சில ரஷ்ய மற்றும் சீன ஊடகவியலாளர்களும் நிகழ்வில் குறிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் அவர்களது வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்களும் நடந்தன.

modi

ரஷ்ய ஆங்கில மொழி செய்தி சேனலான ரஷ்யா டுடேயின் மூத்த ஆசிரியர் கேசெனியா கொன்றடிவா (Ksenia Kondratieva) தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், மன்றத்தில் பல சிறந்த சக ஊழியர்களை சந்தித்திதேன்., ஊடகங்களுக்கு இடையிலான தொடர்புகள் இன்றியமையாத பகுதி. "நான் மன்றங்களில் மேற்கத்திய பத்திரிகையாளர்களுடன் சாதாரண தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. ரஷ்ய பத்திரிகையாளர்கள், அல்லது பொதுவாக ரஷ்யர்கள், பத்திரிகையாளர்கள் நன்கு அறிந்தவர்களாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று பலர் இன்னும் நம்புகிறார்கள்.

"வெளிப்படையாக, புவிசார் அரசியல் யதார்த்தங்கள் இப்போது இருக்கும் விதத்தை உருவாக்குவதற்கு முன்பே, எனது வாழ்க்கையில் இதுபோன்ற அதிர்வுகளை நான் அனுபவித்திருக்கிறேன்," என்று கூறிய அவர்,  ஊடக மையத்தில் இருந்த ஜேர்மன் ஊடகவியலாளர்கள் ரஷ்ய ஊடகவியலாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று தெரிவித்தனர்.

ஆனால், ஒரு வாய்ப்பு கிடைத்தால், சில உலகளாவிய பிரச்சினைகளில் அவர்களின் பார்வை மற்றும் சிந்தனையை அறிய அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்" என்று ஜெர்மன் நாளிதழான டாஸின் அன்னா லெஹ்மன் பிற்பகல் தெரிவித்துள்ளார். இன்றைய உலகம் உலகளாவிய நிகழ்வுகளுடன் அமைக்கப்பட்ட ஊடக அறைகளில் ஒன்றாக தங்கியிருப்பது பத்திரிகையாளர்களின் மீது எந்தவிதமான தாக்கத்தை கொண்டுள்ளது என்று அனைத்து பத்திரிகையாளர்களும் உணரவில்லை.

modi 2

சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கின் (CGTN) தலைமை ஆசிரியர் லை க்ஸ்அஞ் (Li Xiang) கூறுகையில், தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் பிளவுகள் உச்சிமாநாட்டின் ஊடக அறையில் பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் நாள் முழுவதும், உணவு, வேலை, கலாச்சாரம் மற்றும் எல்லாவற்றையும் பற்றிய குறிப்புகளை இந்திய, ஓமானி மற்றும் அமெரிக்க பத்திரிகைகளுடன் பேசி வருகிறார்.

"சாப்பாட்டு என்று வரும்போது, மக்கள் தங்கள் நாட்டு சக ஊழியர்களுடன் ஒன்றாக உட்கார விரும்புகிறார்கள், அது ஒவ்வொரு உச்சிமாநாட்டிற்கும் பொருந்தும். ஆனால் ஊடக அறைக்குள், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பத்திரிகையாளர்களுடன் நான் தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசி வருகிறேன். நான் பிளவு பார்க்கவில்லை, ”என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment