காம்பியா குழந்தைகள் இறப்பு: மூலப் பொருட்கள் வாங்கியது குறித்து மருந்து நிறுவனம் முக்கிய தகவல்

மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் இருமல் மருந்துக்கான மூலப்பொருட்கள் சான்றளிக்கப்பட்ட மற்றும் பிரபல நிறுவனங்களிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளது.

மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் இருமல் மருந்துக்கான மூலப்பொருட்கள் சான்றளிக்கப்பட்ட மற்றும் பிரபல நிறுவனங்களிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
காம்பியா குழந்தைகள் இறப்பு: மூலப் பொருட்கள் வாங்கியது குறித்து மருந்து நிறுவனம் முக்கிய தகவல்

மேற்கு ஆப்ரிக்கா நாடான காம்பியாவில் அண்மையில் 66 குழந்தைகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அடுத்தடுத்த உயிரிழந்தனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO)ஆய்வு செய்ததில், குழந்தைகளுக்கு சீறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர்கள் உட்கொண்ட இருமல் மருந்து இறப்புக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தது.

Advertisment

தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 4 சளி, காய்ச்சல், இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் காம்பியா நாட்டிற்கு 'சிரப்' இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்தது தெரிய வந்தது. இந்நிறுவனம் இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்யவில்லை. ஏற்றுமதிக்கு மட்டும் அனுமதி பெற்று அனுப்பி வந்தது. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையை அடுத்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹரியானாவில் தயாரிக்கும் மற்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்த அந்த 4 மருந்துகள் - ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன்(Promethazine Oral Solution) , கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் (Magrip N Cold Syrup) ஆகும்.

இந்த மருந்துகளில் டை-எத்திலீன் கிளைகால் (di-ethylene glycol) மற்றும் எத்திலீன் கிளைகால் (ethylene glycol) அதிக அளவு சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது குழந்தைகள் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்திய அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், மருந்துகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சான்றளிக்கப்பட்ட மற்றும் பிரபல நிறுவனங்களிடமிருந்து வாங்குவதாக கூறியுள்ளது.

Advertisment
Advertisements

மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அக்டோபர் 5ஆம் தேதி இப்பிரச்சினை
தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலைப் பெற்றோம். உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கையை தொடர்ந்து தகவல் பெற்றோம்.

முதலில் உலக சுகாதார அமைப்பு (WHO) செப்டம்பர் 29ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்தது. அதன்படி மத்திய அரசு அதிகாரிகள் அக்டோபர் 1, 3, 6, மற்றும் 7 ஆகிய தேதிகளில் நிறுவனத்திற்கு வந்து ஆய்வு செய்து பார்வையிட்டனர். மருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மருந்து மாதிரிகள் முடிவுகள் இன்னும் வரவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். தற்போது வேறு எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது" என செய்திக்குறிப்பில் கூறுப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: