Gambia children cough syrup death | புதன்கிழமை உலக சுகாதார அமைப்பு (WHO) நான்கு சிரப்கள் பற்றிய எச்சரிக்கையை எழுப்பிய பின்னர், இந்த விஷயத்தை விசாரிக்கும் இந்திய அதிகாரிகள் குறிப்பிட்ட தயாரிப்புகள் காம்பியாவில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக கூறினர்.
இந்த 4 மருந்துகளும், இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உரிமம் பெறவில்லை. எனவே இந்த நான்கு மருந்துகளில் எதுவும் உள்நாட்டில் விற்கப்படவில்லை, என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் வெளியீடு தெரிவித்துள்ளது.
காம்பியாவால் வாங்கப்பட்ட ஆர்டருக்கு எதிராக, ஏற்றுமதி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதில்லை, எனவே நிறுவனத்திற்கு சிறப்பு அனுமதி தேவை, என்று இந்த விஷயத்தை விசாரிக்கும் அதிகாரி கூறினார்
காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி மருந்துகளுக்கான எச்சரிக்கையை எழுப்பியுள்ளது, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியது.
ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மாகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் – ஆகிய நான்கு சிரப்புகளும் ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இந்திய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட தகவலின்படி, உள்-அரசு அமைப்பு 23 சிரப்பின் மாதிரிகளை சோதனை செய்தது, அவற்றில் நான்கில் டை-எத்திலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் குழந்தைகளில் கடுமையான சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
காம்பியாவில் இறப்புகளுக்கு சிரப் வழிவகுத்தது என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையைப் பகிருமாறு உலக சுகாதார நிறுவனத்தை, அமைச்சகம் வலியுறுத்தியது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் வெளியீட்டில் கூறியிருப்பதாவது: மரணத்திற்கான சரியான காரணத்தை உலக சுகாதார நிறுவனம் இன்னும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (CDSCO) வழங்கவில்லை. எனவே மருத்துவ தயாரிப்புகளுடன், இறப்புக்கான தொடர்பு பற்றிய அறிக்கையை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புடன் விரைவில் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் கோரியுள்ளது.
நிறுவனம் மீது நடவடிக்கை
இது இந்திய சந்தைகளுக்கான தயாரிப்பு இல்லை என்பதால், இந்திய அதிகாரிகளால் சோதிக்கப்படும் சந்தை மாதிரிகள் எதுவும் இல்லை.
இதுகுறித்து விசாரித்து வரும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஹரியானா மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியவற்றின் கூட்டுக் குழு- கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளை எடுத்துள்ளது – (தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளின் ஒரு பகுதியாக உற்பத்தியாளர்களால் சேமிக்கப்படும் காம்பியாவிற்கு அனுப்பப்பட்ட தொகுதிகளின் மாதிரிகள்.)
இந்த மாதிரிகள் சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவில் விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும் அதிகாரிகளின் கூற்றுப்படி, கட்டுப்பாட்டு மாதிரிகள் மாசுபட்டதாகக் கண்டறியப்பட்டாலும், அந்த நிறுவனத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.
உலக சுகாதார நிறுவனம், அதன் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துள்ளது, ஆனால் கட்டுப்பாட்டு மாதிரிகளில் கேள்விக்குரிய அசுத்தங்கள் உள்ளதா என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும். அசுத்தங்களை நாங்கள் கண்டறிந்தால், அந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், இதில் மருந்து ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் இடைநிறுத்தப்படும். இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை, ஏனெனில் இந்த மரணங்கள் இந்தியாவில் நடக்கவில்லை, என்று அந்த அதிகாரி கூறினார்.
தற்போதைய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் முன்மொழியப்பட்ட மசோதா இதை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறக்குமதி செய்யும் நாடு இத்தகைய தயாரிப்புகளை நாட்டில் பயன்பாட்டிற்கு வெளியிட முடிவு செய்யும் முன்பு, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை தர அளவுருக்கள் மீது சோதித்து, தயாரிப்புகளின் தரத்தில் தன்னைத் திருப்திப்படுத்துவது வழக்கமான நடைமுறையாகும் என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.