/tamil-ie/media/media_files/uploads/2021/09/Sabarmati.png)
Gandhi Ashram expansion: குஜராத்தில் அமைந்திருக்கும் காந்தி ஆசிரமத்தின் மறு சீரமைப்பு பணிகளுக்காக மூன்று வருட காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது அம்மாநில அரசு. ஆனால் இந்த நிலத்தை வைத்திருக்கும் 6 அறக்கட்டளைகள், காந்தியின் காலம் தொட்டே அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வம்சாவளியினர் மற்றும் அந்த மிகப்பெரிய ஆசிரம பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் என பல முக்கிய பிரச்சனைகள் பல பங்குதாரர்களை கொண்டு வருவதை சவால் ஆக்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பெரிய ஆசிரம வளாகத்திற்கான பிரதமர் மோடியின் முன்மொழிவு ஆசிரமவாசிகள் மற்றும் அறக்கட்டளையினரின் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. மூன்றாவது மற்றும் நான்காம் தலைமுறையாக ஆசிரமத்தில் வசிக்கும் மக்கள், வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்தில் இருந்தனர். 236 ஆசிரம மக்களில் 50 நபர்களுக்கு மட்டுமே இதுவரை மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் முதன்மை செயலாளார், கே. கைலாஷ்நாதன், காந்தி ஆசிரம நினைவு மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் திட்டத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். ஆசிரமத்தில் வாழும் மக்களை வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. 50 ஆசிரமவாசிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று குடியிருப்பு பகுதிகளை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு முழுமையான உரிமை இருக்கும் குடியிருப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அவர்களுக்கு தேவையான இடத்தை வழங்க நாங்கள் குடியிருப்பு பகுதிகளையும் வாங்கினோம். தற்ஓது அவர்கள் பல்வேறு அறக்கட்டைகளின் கீழ் குத்தகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளில் தான் வசித்து வருகின்றனர் என்று கூறினார்.
நினைவுத் திட்டத்திற்காக அரசாங்கம் மறுவடிவமைப்பு செய்ய திட்டமிட்டுள்ள 55 ஏக்கர் நிலத்தின் பாதுகாவலர்களாக இருக்கும் ஆறு அறக்கட்டளைகள் சபர்மதி ஆசிரமப் பாதுகாப்பு மற்றும் நினைவு அறக்கட்டளை (SAPMT), சபர்மதி ஹரிஜன் ஆசிரம அறக்கட்டளை (SHAT), காதி கிராமோதயோக் பிரயோக் சமிதி (KGPS), சபர்மதி ஆசிரம கusஷலா அறக்கட்டளை (SAGT), குஜராத் ஹரிஜன் சேவக் சங்கம் (GHSS) மற்றும் குஜராத் காதி கிராமோதயோக் மண்டலம் ஆகியவை ஆகும். அறக்கட்டளைகளிடம் இருந்து நிலத்தை வாங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பெறப்படும் நிலங்கள் அரசுடமையாக்கப்படாது என்று அரசு சமீபத்தில் அந்த நிலங்களின் அறக்கட்டளையினருக்கு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், கொள்கையளவில், திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அறக்கட்டளைகள் ஒப்புக் கொள்கிறது என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த அறக்கட்டளையில் இருந்தும் இதற்கு நிராகரிப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கோச்ராப் மற்றும் சமர்பதி ஆசிரமங்கள் இணைக்கப்படும் என்றும், அதற்காக அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாலை ஒன்று பாதாசாரிகளுக்கான சாலையாக மாற்றப்படும் என்று ஆலோசகர் பிமல் பாட்டேல் தெரிவித்துள்ளார். அவருடைய நிறுவனம் HCP வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரைவேட் லிமிடெட் (HCPDPMPL) இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த சாலையின் இருபுறமும் பரவியிருக்கும் "ஆசிரமத்தின் இரு பக்கங்களையும் ஒன்றிணைப்பது" அதன் யோசனை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் தயாரானதும், காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் இருந்து அவரின் இறுதி கட்டம் வரை உடன் இருந்த இமாமின் இமாம் மன்சில் கட்டிடம் உள்ளிட்ட தொன்மையான ஆசிரம கட்டிடங்கள் அனைத்தும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சாலைகளின் இரு புறங்களிலும் இருக்கும்.
தற்போதைய காந்தி ஆசிரமம் இதற்கு முன்பு இருந்த ஆசிரமத்தின் 10-ன் ஒரு பங்காகும். உண்மையான ஆசிரமம் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த மீண்டும் ஆசிரம கட்டிடங்களை மீட்டெடுக்க வேண்டும்.
இதன் இறுதிக் கட்டத்தில் காந்திக்காக உருவாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் மிகவும் முக்கியமானதாக இது இருக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். பார்வையாளர்களுக்கு இடையூறு அளிக்காமல், புனிதத்தையும் நெறிமுறையையும் தடையற்ற அனுபவத்தையும் இந்த ஆசிரமம் வழங்கும் என்றும் அவர் கூறினார். காதி உடை நெய்தல் மற்றும் கையில் காகிதம் தயாரித்தல் போன்று ஒரு காலத்தில் காந்தியுடன் தொடர்புடைய நிகழ்வுகளை பார்வையாளர்கள் இங்கே காண முடியும். ஆனால் தற்போது கலம்குஷ் என்ற கையால் உருவாக்கப்படும் காகிதம் மற்றும் காதி ஆகியவை காந்தி ஆசிரமத்திற்கு வெளியே SAPMT-யால் நடத்தப்பட்டு வருகிறது.
HCPDPMPL-யால் பகிர்ந்து கொள்ளப்பட்ட திட்டப்படி பார்த்தால், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் நினைவிடம் அமைந்திருக்கும் அபாய் படித்துறையில் துவங்க மற்றொரு பக்கம் தண்டி பாலத்தில் நிறைவடைகிறது.
1950களில் காந்தி ஆசிரமம் எப்படி செயல்பட்டதோ அதனை அப்படியே மீள் உருவாக்கம் செய்வது தான் எங்களின் நோக்கம். முழுமையாக பசுமையாக. எந்தவொரு புதிய கட்டிடமும் கட்டடக்கலை பாணியுடன் பொருந்த வேண்டும். இது அமைதியான சூழலாக இருக்க வேண்டும். மக்கள் 2 முதல் 3 மணி நேரம் நடக்க வேண்டும் என்று கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Sabarmati-1.jpg)
மொத்தம் 177 கட்டிடங்கள் தற்போது அங்கு உள்ளன. ஆனால் 120 ஏக்கர் பரப்பவில் அமைந்திருந்த அன்றைய ஆசிரமத்தில் மொத்தம் 63 கட்டிடங்கள் தான் இருந்தன. அவற்றில் 48 தற்போது இருக்கிறது. இப்போது இல்லாத சில பாரம்பரிய கட்டிடங்களை மீண்டும் கட்ட முயற்சிப்போம் என்று திட்டத்துடன் தொடர்புடைய ஒரு முக்கிய நபர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
ஆசிரமங்களில் உள்ள கட்டிடங்களும் அதில் நடைபெறும் செயல்களும் ஒரே எண்ண ஓட்டத்தில் இயங்குகிறதா என்பதை அறிந்து அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். கட்டிடம் மற்றும் செயல்பாடு ஒத்துப்போகும் இடங்கள் மீட்கப்படும், மேலும் செயல்பாடு ஒத்துப்போகவில்லை என்றால், அது நினைவிடத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்படும். செயல்பாடு மற்றும் கட்டிடம் இரண்டும் ஆசிரம எண்ண ஓட்டங்களில் இணையவில்லை என்றால் அவை நீக்கப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 177 கட்டிடங்களில், கிட்டத்தட்ட 60 இடிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆசிரமத்தின் பிரதான நுழைவாயிலின் எதிர்ப்புறம் அமைந்திருக்கும் குஜராத் அரசின் தோரான் ஹோட்டல் தான் முதலில் நீக்கப்படும் முக்கிய கட்டிடங்களில் ஒன்றாக இருக்கிறது.
அகமதாபாத்தில் இருக்கும் மிகப்பழமையான, தண்டி யாத்திரையில் நடந்து வருவது போன்று உருவாக்கப்பட்டிருக்கும் காந்தியின் சிலை வருமானத்துறை அலுவலகத்தில் இருந்து தற்போது நினைவிடத்தின் ஒரு பகுதியான ஹ்ரிதே குஞ்ச் அருகே கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில், குஜராத் அரசாங்கம் ரூ .1,246-கோடியில் ஆசிரமத் திட்டத்திற்காக முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான ஆட்சி மன்றத்தையும் கைலாஷ்நாதன் தலைமையில் நிர்வாகக் குழுவையும் அமைத்தது. இதில், நினைவிடம் மேம்பாட்டுக்காக ரூ. 500 கோடியும், ஆசிரம வளாக வளர்ச்சிக்கு சுமார் ரூ .270 கோடியும், ஆசிரம மக்கள் வசிப்பதற்கான வீடுகளுக்காக ரூ. 300 கோடியும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
SAPMT அறங்காவலர் கார்த்திகேய சாராபாய், அறக்கட்டளையின் அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டி, "இந்த சூழல் பார்வையாளர்களிடம் காந்தியின் கவனத்திற்கான அழைப்பு, அவருடைய எளிமைக்கான சித்தாந்தம், பொருளாதாரம், இயற்கைக்கான மரியாதை ஆகியவற்றை உறுதி செய்யும் என்று கூறினார். இருந்தாலும் அரசின் திட்டங்கள் குறித்து அச்சங்கள் நிலவி வருகின்றன.
ஒரு மாதத்திற்கு முன்பு, குஜராத் சாகித்ய பரிஷத் தலைவர் பிரகாஷ் என் ஷா மற்றும் வரலாற்றாசிரியர்கள் ராஜ்மோகன் காந்தி மற்றும் ராமச்சந்திர குஹா உட்பட 130 முக்கிய நபர்கள் எந்த ஒரு காந்திய நிறுவனத்தையும் அரசு கையகப்படுத்தும் முயற்சியை கூட்டாக எதிர்த்தனர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.