அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தலைவர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில், மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி குறிப்பிடுகையில், காந்தி படுகொலை வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்திருந்தால், தீர்ப்பு நாதுராம் கோட்சே ஒரு கொலைகாரன், ஆனால் தேசபக்தர் என்று இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான வழியைத் தெளிவாக்கிய உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பு இந்த இணைப்பில் முழுமையாக ஆங்கிலத்தில் படிக்கலாம்.
“காந்தி கொலை வழக்கை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரித்திருந்தால், தீர்ப்பு நாதுராம் கோட்சே ஒரு கொலைகாரன், ஆனால் அவரும் ஒரு தேச பக்தர் என்று இருந்திருக்கும்” என துஷார் காந்தி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவருடைய மற்றொரு டுவிட்டில், “எல்லாமே நீதி அல்ல, எல்லாமே அரசியல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தி தீர்ப்பு படிக்கப்பட்டவுடன் தயவுசெய்து நம் தேசத்தை பாதிக்கிற உண்மையான பிரச்சினைகளுக்கு திரும்புவோம்”என்று துஷார் காந்தி டுவிட் செய்துள்ளார்.
நீதிபதிகள் ஒருமனதாக அளித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு ராமர் கோயில் கட்டுவதற்கு வழி வகுத்தது. மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரத்தில் முக்கிய இடத்தில் ஒரு புதிய மசூதியை நிர்மாணிப்பதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.