Advertisment

மகாத்மாவுக்கு மரியாதை செலுத்த 2,500 கி.மீ.க்கு மேல் பயணம்- 73 வயதான தஞ்சாவூர் காந்தியவாதி

சிவஞானம் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியதிலிருந்து தனது வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் மறைந்துவிட்டதாக நம்புகிறார்.

author-image
WebDesk
New Update
Sivangnanam

Meet the 73-year-old man from Tamil Nadu who visits Rajghat every Oct 2

தஞ்சாவூர் முதல் செம்பூர் வரை, காந்தி ஜெயந்தி திங்களன்று, ராஜ்காட்டில் உள்ள மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் மாநிலங்கள் முழுவதும் பயணம் செய்தனர்.

Advertisment

அவர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த சிவஞானம் என்பவர், வெள்ளிக்கிழமை தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் 2,500 கி.மீ.க்கு மேல் பயணம் செய்து டெல்லி ந்தார். இருப்பினும், இது அவரது முதல் வருகை அல்ல - கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அவர் டெல்லிக்கு வருகை தருகிறார்.

வெள்ளை நிற கைத்தறி வேட்டியை கட்டி, மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி இருந்த சிவஞானம், ’மகாத்மாவுக்கு மரியாதை செலுத்த எவ்வளவு தூரம் பயணிக்கவும் தயாராக இருப்பேன்’, என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி, காலை 10 மணிக்கு இங்கு வந்து மகாத்மாவின் நினைவிடத்தின் முன் சாஷ்டாங்கமாக வணங்கி அவர் மீதான என் அன்பை வெளிப்படுத்துகிறேன். பின்னர் நான் பிரார்த்தனை செய்து தியானம் செய்கிறேன். மதிய உணவிற்கு, ராஜ்காட்டில் சாப்பிட நான் எப்போதும் தயிர் சாதம் எடுத்துச் செல்வேன்.

பிறகு, நான் மக்களுடன் தொடர்புகொண்டு மகாத்மாவின் போதனைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புகிறேன்’.

72 வயதான காந்தியவாதி, ஒவ்வொரு முறை ராஜ்காட் வரும்போதும் படங்களைக் கிளிக் செய்து அவற்றை ஞாபகமாக பிரிண்ட் செய்து வைத்திருக்கிறார்.

‘2015 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருகையையும் ஆவணப்படுத்தவும், படங்களை எடுக்கவும் ஆரம்பித்தேன்... அவற்றை எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்கிறேன், என்ற சிவஞானம் காந்தியின் நினைவகத்தின் கருப்பு பளிங்கு கட்டமைப்பின் முன் போஸ் கொடுத்த தனது படங்களைக் காட்டினார்.

சிவஞானம் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியதிலிருந்து தனது வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் மறைந்துவிட்டதாக நம்புகிறார். நான் எளிமையான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழத் தொடங்கினேன், இது எனது பாதி கவலைகளைத் தீர்க்க உதவியது.

சிவஞானத்தின், காந்தி உடையில் ஈர்க்கப்பட்ட பல பார்வையாளர்கள் ராஜ்காட்டில் அவருடன் படங்களைக் கிளிக் செய்தனர். என்னுடைய உடையின் காரணமாக குழந்தைகள் என்னை பாபு என்று அடையாளம் காணும்போது அது என் இதயத்தை குளிரவைக்கிறது, என்கிறார் சிவஞானம்.

இரு தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாங்கள் இங்கு வந்துள்ளோம்... காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி இருவரும் இந்த தேசத்தின் வரலாற்றில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர், என்று குர்கானில் வசிக்கும் ரேணு பாண்டே கூறினார்.

செம்பூரில் வசிக்கும் பானி ஜா கூறுகையில், நான் டெல்லிக்கு வேலை ரீதியாக வந்தேன். எனது பயணத்தை ஒரு நாள் நீட்டித்தேன், அதனால் நான் நகரத்தை சுற்றிப்பார்க்க முடியும், மேலும் காந்தி ஜெயந்தி என்பதால், காந்தி ஸ்மிருதி மற்றும் ராஜ் காட் ஆகியவற்றை பட்டியலில் சேர்த்தேன், ன்றார்

Read in English: Meet the 73-year-old man from Tamil Nadu who visits Rajghat every Oct 2

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment