புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள மேட்ரிக்ஸ் மொபைல் கடையில் கடந்த 19ஆம் தேதி டிப் டாப்பான வாலிபர் ஒருவர் தன்னிடம் ஒரிஜினலான ஐ போன் ஒன்று உள்ளது.
இதன் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனவும் ஆனால் பில் இல்லாமல் தருவதால் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் போதும் என்று டூப்ளிகேட் ஐபோனை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மொபைல் கடை உரிமையாளர் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர் இந்த விசாரணையில் இதுபோன்று பல்வேறு மொபைல் கடைகளில் செல்போன்களை விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா. சைதன்யா உத்தரவின் பேரில் எஸ். பி. சுவாதி சிங் மேற்பார்வையில் பெரிய கடை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேடிய தனிப்படைகள் கேரள பாலக்காட்டைச் சேர்ந்த முகமது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முசைய்த், சவுத், காஷிப், உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து அழைத்து வந்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலியான ப்ரோ மேக்ஸ் ஆப்பிள் ஐபோன் 10, போலியான ஆப்பிள் ஏர் பாட்ஸ் 35, போலியான போட் ப்ளூடூத் செட் 15 ,போலியான hp usb 128, மற்றும் ஜிபி 6 என பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“