/indian-express-tamil/media/media_files/EV3NAM5cXPpIMaSLDKFP.jpg)
தி.மு.க எம்.எல்.ஏ-வைக் கடத்திய பிரபல கேங்ஸ்டர் அனீஷ், சிறையில் பிளேடால் தாக்கி கொல்ல முயற்சி
தி.மு.க எம்.எல்.ஏ-வைக் கடத்தலில் பிரபலமான கேங்ஸ்டர் அனீஷ் மீது கேரள விய்யூர் மத்திய சிறைக்குள் சவரக்கத்தி பிளேடால் தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயம் அடைந்துள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ கடத்தல் மூலம் பிரபலமானவர் கேங்ஸ்டர் மாராடு அனீஷ், இவர் கேரளாவில் உள்ள விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் அனீஷைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிளேடைப் பயன்படுத்தி தாக்கியதில் அனீஷின் தலை, உடல் மற்றும் முகம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அனீஷை காப்பாற்ற முயன்ற சிறை உதவி சிறை அதிகாரி பினோய் காயமடைந்தார். கேங்ஸ்டர் அனீஷ் மீது விய்யூர் சிறையில் உள்ள கைதிகளான அஷ்ரப் மற்றும் உசேன் ஆகியோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறைக்கு வருவதற்கு முன்பு வெளியே ஒரு சண்டையில் படுகாயம் அடைந்த அனீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போதுதான் அனீஷ் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அனீஷ் மீது தாக்குதல் நடத்திய கைதிகள் அஷ்ரப் மற்றும் உசேனுக்கு எப்படி பிளேடு வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குடல் இரக்கம் நோயால் பாதிக்கப்பட்ட ஹுசைன் மற்றும் அஷ்ரப் ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்கு வந்திருந்தனர். அப்போது, அவர்கள் சிறையின் முடிதிருத்தும் கடையில் இருந்து சாதுர்யமாக எடுத்து வந்த பிளேடால் இருவரும் அனீஷை தாக்கினர்.
மருத்துவ ஊழியர்கள் அவர்களை தடுக்க முயன்றபோது, அவர்கள் இருவரில் ஒருவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதாக மிரட்டி, பின்னர் தன்னைத்தானே வெட்டிக் கொண்டார். அவரை தடுத்து நிறுத்திய அதிகாரி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
மேலும், இந்த தாக்குதலுக்கு தனிப்பட்ட பகையே காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். கோழிக்கோடு அம்பயத்தோட்டை சேர்ந்தவர் அஷ்ரப். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் உசேன். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அனீஷ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அனீஷ் மீது கேரளாவில் கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொச்சி நகர காவல்துறையின் சிறப்புக் குழு நவம்பர் 7-ம் தேதி அனீஷைக் கைது செய்தது. பக்கத்து சேரியைச் சேர்ந்த ஒரு கும்பலுடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த அனீஷ், வலது தோள்பட்டையில் தசைகள் கிழிந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார். துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தும் அனீஷ், தமிழகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-வை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இம்தியாஸ் கொலை வழக்கில், விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் அனீஷை விடுவித்தது. அக்டோபர் 31-ம் தேதி நெட்டூரைச் சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று, திருவல்லாவில் அடித்துத் தூக்கி எறிந்ததாகவும், 2022-ம் ஆண்டு திருக்கக்கரை ஸ்டேஷன் அருகே கொலை செய்ய முயன்ற வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். கேங்ஸ்டர் அனீஷ் மீது ஆட்சியர் காபா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.