டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு; ரவுடி கோகி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை

டெல்லி ரோகிணி நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் உடையில் இருந்த 2 ரவுடி கும்பலால் ரவுடி கோகி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த 2 பேரும் சிறப்பு பிரிவு குழு போலீசரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Gangster Gogi dead, gangster gun fire in delhi rohini court, delhi, gangster gogi, tillu, sunil, gangster gun fire in court, delhi, gangster gogi 2 from rival gang shot dead, Rohini court in Delhi, டெல்லி, ரோகிணி நிதிமன்றத்தில் ரவுடி கோகி சுட்டுக் கொலை, 2 பேர் சுட்டுக் கொலை, நீதிமன்றத்திற்குள் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு, ரோகிணி நிதிமன்றம் டெல்லி, gangster, going, delhi court, rohini court

சிறையில் உள்ள ரவுடி ஜிதேந்தர் மான் என்றழைக்கப்படும் கோகியை அதே போல சிறையில் உள்ள சுனில் என்கிற டில்லு தாஜ்புரியா தலைமையிலான ரவுடி கும்பலைச் சேர்ந்த 2 பேரால் டெல்லி ரோகிணி நீதிமன்றத்திற்குள் வெள்ளிக்கிழமை மதியம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ரவுடி கோகியுடன் இருந்த சிறப்புப் பிரிவு புலனாய்வு குழு போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் வழக்கறிஞர்கள் வேடத்தில் வந்த 2 பேரையும் சுட்டுக் கொன்றனர். ரவுடி கோகிக்கு ஐந்து-ஆறு துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, கோகியின் கூட்டாளி குல்தீப் என்றழைக்கப்படும் ஃபஜ்ஜா, கர்கர்தூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது போலீஸ் காவலில் இருந்து தப்பித்தார். அப்பொழுதில் இருந்து புலனாய்வு குழு கோகி மற்றும் அவரது கூட்டாளிகளை நீதிமன்ற விசாரணைகளில் ஆஜர்படுத்தப்படும்போது பாதுகாப்புக்கு உடன் வந்தனர்.

ரவுடி கோகி மற்றும் ரவுடி டில்லு கும்பலைச் சேர்ந்த சுனில் மான் இருவரும் ஒரே கொலை வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எண் 207ல் நேரில் ஆஜராக வேண்டியிருந்தது.

“ரவுடி கோகிக்கு அரை மணி நேரத்திற்கு முன் ஆஜரான சுனில் மான் உடன் வடக்கு சிறப்பு பிரிவு குழு இருந்தது. மதியம் 1.15 மணியளவில், கோகி நீதிமன்ற அறையில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்த சமயத்தில், உத்தரப் பிரதேசம், பாக்பாத்தை சேர்ந்த ராகுல் மற்றும் பக்கர்வாலா கிராமத்தைச் சேர்ந்த மோரிஸ் என அடையாளம் காணப்பட்ட 2 பேர் வழக்கறிஞர் உடையில் வந்து கோகி மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் கோகிக்கு 5-6 துப்பாக்கி தோட்டா காயங்கள் ஏற்பட்டன” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

“கோகியுடன் வந்த வடக்கு புலனாய்வு குழு பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியது. சிறப்புப் பிரிவின் இரு அணிகளாலும் மொத்தம், எட்டு சுற்றுகள் சுடப்பட்டன. சிறப்புப் பிரிவின் வடக்கு வரம்பிலிருந்து, தலைமை காவலர் குல்தீப் இரண்டு சுற்றுகளையும், HC சந்தீப் நான்கு சுற்றுகளையும், காவலர் ரோஹித் இரண்டு சுற்றுகளையும் சுட்டனர். ஏகே-47 துப்பாக்கியுடன் இருந்த மூன்றாவது படைப்பிரிவு தாக்குதல் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடிகள் .38 போர் துப்பாகி, மற்றும் .30 போர் துப்பாக்கியைப் பயன்படுத்தினர்” என்று ஒரு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

ரவுடி கோகி உடலில் நான்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்ததையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்கே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ரவுடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் வழக்கறிஞர் உடையில் வந்து துப்பாக்கியால் சுட்டதால் ரோகிண் நீதிமன்ற அறைக்குள் குழப்பம் ஏற்பட்டதாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். “தாக்குதல் நடத்திய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்” என்று அவர் கூறினார். உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கோகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் அங்கே உயிரிழந்தார் என்று கூறினார்.

காவல்துறையினரின் கூறுகையில் கோகி மற்றும் அவரது எதிரியான சுனில் என்ற டில்லு பல ஆண்டுகளாக அலிப்பூர் மற்றும் சோனிபட்டில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுடைய 2 குழுக்களுக்கு இடையேயான தொடர்ச்சியான மோதல்கள் பெரும்பாலும் இரத்தக்களரியில் முடிவடைந்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளில், இரு கும்பலைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள், அவர்களுடைய உயிருக்கு ஆபத்து இருந்தாலும் உலாவி வருகின்றனர்.

இந்த விசாரணையில் தொடபுடைய ஒரு காவல்துறை அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “கோகி மற்றும் டில்லுவிற்கு இடையிலான போட்டி அவர்களின் கல்லூரி நாட்களிலிருந்து தொடங்கியது. இருவரும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள். இருவரும் மாணவர் அரசியலில் மோதிக் கொண்டனர். 2012ம் ஆண்டு கோகியும் அவரது கூட்டாளிகளும் டில்லுவின் நெருங்கிய நம்பிக்கையாளரான விகாஸைச் சுட்டுக் கொன்றபோது, ​​இந்த சர்ச்சை வன்முறையாக மாறியது. 2015ல், டில்லுவை சோனிபட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, ​​டில்லு சோனிபட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோகி, டில்லுவைத் தாக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​சோனிபட்டில் இருந்து ஹரியானா சி.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டு டெல்லி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.” என்று கூறினார்.

காவல்துறையினர் கூறுகையில், “கோகி, டில்லுவை கொலை செய்ய நினைத்ததால் போலீஸ் அதிகாரிகள் 2016ல் போலீஸ் விசாரணைக்காக ஹரியானா நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பினார். கோகி பின்னர் டில்லுவின் அனைத்து கூட்டாளிகளையும் கொன்றார். கடந்த ஆண்டு குர்கானில் கைது செய்யப்பட்டார்.” என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான், டெல்லி ரோகிணி நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் உடையில் இருந்த 2 ரவுடி கும்பலால் ரவுடி கோகி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த 2 பேரும் சிறப்பு பிரிவு குழு போலீசரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர்கள் நாளை வேலை நிறுத்தம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 25 சனிக்கிழமையன்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்யுமாறு டெல்லி பார் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.

டெல்லியின் அனைத்து மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷனின் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் ரோகிணி கோர்ட்டில் நடந்த இன்றைய துரதிருஷ்டவசமான சம்பவத்தின் காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பணிபுரிவது நிறுத்தப்படும். அனைத்து உறுப்பினர்களும் செப்டம்பர் 25 ஆம் தேதி தங்கள் நீதிமன்றப் பணியை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று டெல்லி பார் அசோசியேஷனின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gangster gogi and 2 from rival gang shot dead at rohini court in delhi

Next Story
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை – உச்ச நீதிமன்றத்தில் அறிவித்த மத்திய அரசுNo caste census, conscious policy decision: Govt to Supreme Court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com