Advertisment

கௌரி லங்கேஷ் கொலையாளிகள் ‘ஹிட் லிஸ்ட்’டில் நம்பர் 1 யார் தெரியுமா?

34 பேர் அடங்கிய பட்டியலில் இடம் பெற்ற திரைத்துறை பிரபலம் யார்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gauri Lankesh murder case

Gauri Lankesh murder case

Gauri Lankesh murder case : கௌரி லங்கேஷ் என்ற ஊடகவியலாளர் கர்நாடகாவில் அடையாளம் தெரியாத நபர்களால் செப்டம்பர் 5ம் தேதி, 2017ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

Advertisment

கொலையாளிகளை அடையாளம் கண்டுள்ள கர்நாடக காவல்துறை, அமோல் காலே என்பவரை கைது செய்துள்ளது. அவரிடத்தில் இவ்வழக்கு சம்பந்தமான மிக முக்கிய நாட்குறிப்பினை கைப்பற்றியிருக்கிறார்கள் காவல் துறையினர்.

அந்நாட்குறிப்பில்  34 நபர்கள் கொண்ட பட்டியலை அந்நபர் எழுதி வைத்துள்ளார். அந்த பட்டியலில் 2ம் இடத்தில் கௌரி லங்கேஷ் இடம் பெற்றுள்ளார். முதலாவது இடத்தில் திரைத்துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரிஷ் ரகுநாத் கர்னாட் அவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

தமிழில் ரட்சகன், மின்சாரக் கனவு, காதலன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் கிரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Gauri Lankesh Murder Case திரைப்பட நடிகர் மற்றும் எழுத்தாளர் க்ரிஷ் கர்னாட்

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான நபர்கள் கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நாட்குறிப்பு, புனேவினைச் சேர்ந்த அமோல் காலே என்ற 37 வயது நபரிடம் இருந்து பெறப்பட்டது. இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பில் முன்னாள் உறுப்பினராக இவர் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை கர்நாடக சிறப்பு விசாரணை காவல் துறையினர் மே மாதம் 21ம் தேதி கைது செய்தார்கள். கொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ், இந்துத்துவா கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்குறிப்பில் இடம் பெற்ற பெயர்கள்: 

இரண்டு தனித்தனி தாள்களில் மொத்தம் 34 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. ஒரு பெரிய கலந்தாலோசனைக்குப் பிறகு இவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

26 வயது மதிக்கத்தக்க பரசுராம் என்பவரை, கௌரி லங்கேஷினை கொலை செய்ய ஏற்பாடு செய்து, அவருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கௌரி லங்கேஷினை கொலை செய்ய சுமார் 8 மாத காலங்கள் திட்டம் தீட்டியிருந்தினர்.

காலே, மற்றும் அவரின் கூட்டாளிகளை கைது செய்த இரண்டு மாதங்களுக்குள், பட்டியலில் இடம் பெற்றிருந்த மற்றொரு நபரான பேராசிரியர் கே.எஸ் பகவானை மைசூரில் கொலை செய்திருக்கிறார்கள்.

To read the Article about Guari Lankesh Murder Case in English 

இப்பட்டியலில் கன்னட எழுத்தாளர்கள் யோகேஷ் மாஸ்டர், சந்திரசேகர் பட்டில், பனஜகரே ஜெயபிரகாஷ் ஆகியோர்களின் பெயர்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

இப்பட்டியலில் த்வாரகாந்த் என்ற கர்நாடக பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களுக்கான கமிசன் சேர்மென், பரகூர் ராமச்சந்திரப்பா, பட்டில் புட்டப்பா, சென்னவீரா கனவி, நடராஜ் ஹுலியார், நரேந்திர நாயக், ஜம்தர் ஆகியோர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்கள் விபரம்:  

காலே, அவருடைய நண்பர் சுஜீத் குமார், மற்றும் இந்துத்துவா குழுக்களைச் சேர்ந்த 30 நபர்கள் சேர்ந்து இந்த கொலைகளை திட்டமிட்டுள்ளனர். காலே மற்றும் அவர்களின் கூட்டாளிகளோடு சேர்த்து இதுவரை இக்கொலை தொடர்பாக 9 நபர்களை கைது செய்திருக்கிறது கர்நாடக காவல் துறை.

திங்கள் அன்று, கொலையாளி பரசுராம் வாக்மரேவை கௌரியின் வீடுவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற கணேஷ் மிஷ்கின் (27) என்பவரை காவல் துறை கைது செய்திருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment