கடந்த 2006 முதல் 2008 வரை சம்ஜ்ஹவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மலேகான் என நான்கு முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
’அபினவ் பரத்’ என்ற இந்துத்துவ அமைப்பு இந்த குண்டு வெடிப்புகை நிகழ்த்தியதாக தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.
இந்து ராஜ்யம் அமைக்கத் துடிக்கும் ‘சனாதன சன்ஸ்தா’ என்ற அமைப்பைச் சார்ந்தவர்களால் 2011 முதல் 2016 வரை ரகசிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்டது.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பான விசாரணையை கர்நாடக போலீஸ் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு பெங்களூரு நீதிமன்றத்தில் ஒரு பகுதி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.
2008-ம் ஆம் ஆண்டில் மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கில், போபால் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் மற்றும் 13 பேர் ‘பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்’ என அறிவிக்கப்பட்டனர்.
மேற்கூறிய 13 பேரில் காணாமல் போயிருக்கும் ‘அபினவ் பாரத்’ குழுவின் உறுப்பினர்கள் ராம்ஜி கல்பாங்ரா மற்றும் சந்தீப் டாங்கேவும் அடங்குவர்.
கவுரி லங்கேஷ் வழக்கில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களின் படி, கைது செய்யப்பட்டிருக்கும் மூன்று பேர் ‘சனாதன சன்ஸ்தா’ அமைப்பில் தொடர்புடையவர்கள், 4 சாட்சிகள் குண்டு தயாரிப்பில் பயிற்சி பெற்றவர்கள்.
‘பாபாஜி’-யின் முன்னிலையில் 4 ‘குருஜிக்கள்’ முகாம்களில் குண்டு தயாரிக்கும் பயிற்சி அளிக்கிறார்களாம்.
2007-ல் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புக்குப் பின் 11 ஆண்டுகள் கழித்து 2018 நவம்பரில் ‘பாபாஜி’ கைது செய்யப்பட்டார். இதற்கிடையே தான் சுரேஷ் நாயர் என்பதை மறைத்து குஜராத்தில் இருந்த பாபாஜி ’அபினவ் பாரத்தின்’ உறுப்பினராகவும் இருந்தார்.
சுரேஷ் நாயர் கைது செய்யப்பட்டதன் மூலம் சன்ஸ்தா பயிற்சி முகாமில் டாங்கே, கல்சாங்கரா, அஸ்வினி சவ்ஹான் ஆகியோர் குண்டு வெடிப்பு நிபுணர்களாக இருந்தது தெரிய வந்தது.
இவர்கள் சம்ஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மற்ற நான்கு குண்டு வெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதாப் ஹஸ்ரா என்பவரால் 5-வது பயிற்சியாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேற்கு வங்க இந்துத்துவ இயக்கத்தின் முக்கியப் புள்ளி பவானி சேனாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
சனாதன் சன்ஸ்தா அமைப்பு துப்பாக்கி சூடு, மேம்பட்ட குண்டு வெடிப்பு ஆகியவற்றை பயிற்றுவிக்கும் 19 பயிற்சி வகுப்புகளை 2011 முதல் 2017-க்குள் நடத்தி முடித்திருப்பதாகவும், இதில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகாவில் சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் கலந்துக் கொண்டதாகவும், சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கவுரி லங்கேஷ் வழக்கில், சந்தேகம் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் ’பாபாஜி’ போன்ற சில பயிற்சியாளர்கள் துறவி உடை அணிந்து சென்றிருக்கிறார்கள். பெட்ரோல் குண்டு முதல் அதி நவீன குழாய் குண்டுகள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள்.
பயிற்சி முகாம்கள் பல முக்கிய இடங்களில் நடந்திருக்கின்றன என்பதையும் சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. 2011-ஜல்னா, 2015 ஜனவரியில் ஜல்னா, ஆகஸ்ட் 2015-ல் மங்களூர், நவம்பர் 2015-ல் அகமதாபாத், 2016 ஜனவரியில் நாசிக் ஆகிய 5 பயிற்சி முகாம்கள் முக்கியத்துவம் பெறுவதாக சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனை அபினவ் பாரத் குழு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.