Advertisment

அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பிரதமர் தான் அவரை பாதுகாக்கிறார் – ராகுல் காந்தி

அதானி ஊழல் மூலம் இந்தியாவின் சொத்துக்களை குவித்துள்ளார், பிரதமர் அவரை 100 சதவீதம் பாதுகாத்து வருகிறார். அதானி பா.ஜ.க.,வை ஆதரிக்கிறார்... இவை அனைத்தும் நிறுவப்பட்ட விஷயங்கள் – ராகுல் காந்தி

author-image
WebDesk
New Update
adani rahul

இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் வழங்கியதாக அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் உள்ள வழக்கறிஞர்கள் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி அவரை "பாதுகாப்பதாக" குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: On Gautam Adani indictment, Rahul Gandhi says: ‘He should be arrested today itself… PM is protecting him’

திங்கள்கிழமை தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் புயலைக் காணமுடியும் என்பதைச் சுட்டிக்காட்டி, இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பும் என்று ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார். பிரதமர் மற்றும் பா.ஜ.க அரசு அதானி குழுமத்திற்கு ஆதரவளிப்பதாகவும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற அவரது நிறுவனத்திற்கு உதவுவதாகவும் ராகுல் காந்தியும் காங்கிரஸும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நியூயார்க்கில் அமெரிக்க வழக்கறிஞர்கள் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் 6 பேர் மீது குற்றஞ்சாட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “அமெரிக்க சட்டம் மற்றும் இந்திய சட்டங்கள் இரண்டையும் அதானி மீறியுள்ளார் என்பது அமெரிக்காவில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. அவர் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், ஆனால் அதானி ஏன் இந்த நாட்டில் சுதந்திரமான மனிதராக இயங்குகிறார் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் முதல்வர் கைது செய்யப்பட்டார். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதானி ரூ 2,000 கோடி ஊழல் செய்துள்ளார், இன்னும் இருக்கலாம். ஆனால் அவர் சுதந்திரமாக இருக்கிறார். எந்த பிரச்சனையும் இல்லை. விசாரணை இல்லை” என்றார்.

“நாங்கள் இதை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறோம். இதை (செபி தலைவர்) மாதபி புச் பிரச்சினையில் எழுப்பி வருகிறோம். இது நாம் என்ன சொல்கிறோமோ அதை நிரூபிக்கிறது. அதானியை பிரதமர் பாதுகாக்கிறார். மேலும் அதானியுடன் பிரதமர் ஊழலில் ஈடுபட்டுள்ளார். இது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதானி கைது செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்... இன்றே... அவருக்குப் பாதுகாவலராக இருந்த மாதபி புச் நீக்கப்பட்டு அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவாரா என்பது குறித்து விளக்கிய ராகுல் காந்தி, “நாங்கள் இந்தப் பிரச்னையை எழுப்புவோம். இந்தப் பிரச்சினையை எழுப்புவது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் என்னுடைய பொறுப்பு. பிரதமர் அவரை 100 சதவீதம் பாதுகாத்து வருகிறார். இந்த தனிநபர் (அதானி) ஊழல் மூலம் இந்தியாவின் சொத்துக்களை குவித்துள்ளார், இந்த நபர் பா.ஜ.க.,வை ஆதரிக்கிறார்... இவை அனைத்தும் நிறுவப்பட்ட விஷயங்கள். நாங்கள் அதை மீண்டும் வலியுறுத்துவோம்,” என்றார்.

ஆந்திரா, சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில மின்சார விநியோக நிறுவனங்களுடனான மின் விநியோக ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கேட்டதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

“அதானியை கைது செய்ய வேண்டும்… மேலும் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி… ராஜஸ்தானும் இதில் ஈடுபட்டுள்ளது… சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க அரசாங்கம் இதேபோன்ற ஒப்பந்தத்தில் நுழைந்தது மற்றும் மகாராஷ்டிராவும் அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதே ஒப்பந்தம் சத்தீஸ்கரில் இருந்தது. எதிர்க்கட்சி அரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க அரசாக இருந்தாலும் சரி, எங்கு நடந்தாலும் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், முக்கிய நபர் சிறையில் அடைக்கப்பட வேண்டும், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று ராகுல் காந்தி கூறினார்.

அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, எங்கு ஊழல் நடந்தாலும் விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆனால் விசாரணை அதானியிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

“ஒரு விதத்தில், அதானி இந்தியாவைக் கடத்திவிட்டார்... நாடு அதானியின் பிடியில் உள்ளது... இந்தியாவின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்புத் துறை... இது ஒரு பார்ட்னர்ஷிப். மோடி ஒரு பக்கம், அதானி மறுபக்கம்,'' என்று ராகுல் காந்தி கூறினார்.

சி.பி.எம் கட்சியும் ஒரு அறிக்கையில் இந்த விவகாரத்திற்கு எதிர்வினையாற்றியது: “அதானிகளால் இவ்வளவு பெரிய அளவிலான லஞ்சம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியது இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில் அவர்களின் குற்றவியல் நீதி அமைப்பு மூலம் அம்பலப்படுத்தப்பட்டது வெட்கக்கேடானது. கௌதம் அதானி மற்றும் அவரது வணிக சாம்ராஜ்ஜியம் அவரது சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களை நிறைவேற்றுவதற்கு மோடி அரசாங்கத்தின் முழு பாதுகாப்பையும் பெற்றுள்ளது. பிரதமர் மோடியே அதானியை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் எந்த விசாரணை அல்லது வழக்குத் தொடராமல் பாதுகாத்து வந்தார். அமெரிக்காவில் அரசு தரப்பு அளித்துள்ள ஆதாரத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்.” 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi adani Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment