70 வயதான செயற்பாட்டாளர்களின் நண்பருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர் சாதாரண தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். அவருடைய தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்படும்.
பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவுதம் நவ்லகாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய புலனாய்வு முகமை ஆட்சேபனை தெரிவித்த போதிலும், அவரை உடல்நலக் காரணங்களுக்காக சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, நவ்லகா முதலில் ஒரு மாதத்திற்கு வீட்டுக்காவலில் இருப்பார் என்றும், அதன் பிறகு நீதிமன்றம் அதை மறுஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தனர். நவ்லாவுக்கும் மும்பையில் அவருடன் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நண்பர் சஹ்பா ஹுசைனுக்கும் கடுமையான நிபந்தனைகளை இந்த அமர்வு விதித்துள்ளது. நிபந்தனைகளில் தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளும் அடங்கும்.
நவ்லகா இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன், வளாகத்தில் உரியா மதிப்பீடு மேற்கொள்ள என்ஐஏ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. வீட்டுக் காவலை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும் தடுக்கவும் என்.ஐ.ஏ முகமை தகுந்த காவல்துறையினரை நிறுத்த அனுமதி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது பாதுகாப்பிற்காக ஏற்படும் செலவுகளுக்கு ரூ.2.4 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
நவ்லகா வீட்டுக் காவலில் இருக்கும்போது இணையம், மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஐபாட்கள் அல்லது வேறு எந்த தகவல் தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முறை, 10 நிமிடங்களுக்கு, பாதுகாப்புப் பணியாளர்களால் வழங்கப்படும் மொபைல் போனை அவர் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். அந்த போன் இணைய இணைப்பு இல்லாத சாதாரண ஃபோனாக இருக்க வேண்டும். அவருடன் இருப்பவர்களுடைய போன் உட்பட வேறு எந்த போனையும் அவர் பயன்படுத்தக்கூடாது.
நவ்லகா மற்றும் அவருடன் இருப்பவரின் தொலைபேசியைக் கண்காணிப்பது மற்றும் அழைப்புகளை பதிவு செய்வதற்கு என்.ஐ.ஏ-வுக்கு அனுமதி உள்ளது. அவருடைய தொலைபேசியில் இருந்து
நவ்லகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், டெல்லியில் அவருக்கு வீடு இருப்பதால் அங்கே இருக்க வசதியாக இருக்கும் என்று கூறிய போதிலும், அவர் மும்பை அல்லது நவி மும்பையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அழைப்புகள் அல்லது செய்திகளின் விவரங்களை நீக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த இருவரை வாரத்தில் மூன்று மணி நேரம் சந்திக்கலாம், அவர்களுடைய விவரங்களை என்ஐஏ-க்கு வழங்க வேண்டும். பார்வையாளர்கள் அவரை அழைக்கும்போதுகூட, தொலைபேசிகள், ஐபாட்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் வீட்டிற்குள் அனுமதிக்கப்படாது.
அறைகளுக்குள் சி.சி.டிவி கேமராக்களை பொருத்த அனுமதிக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ வலியுறுத்திய போதிலும், ஒவ்வொரு அறையின் நுழைவாயிலிலும் வெளியேயும் சி.சி.டிவி கேமராக்களை நிறுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. கேமராக்கள் முழுவதும் வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும் என்றும், எந்த நேரத்திலும் பயனற்றதாக இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. அவற்றைப் பராமரிப்பதற்கான முழுச் செலவையும் நவ்லகா ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“