நாட்டின் ஜிடிபி ஆறு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

GDP : தனியார் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவு தான் இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது

india gdp numbers, india economic gdp, india gdp april-june quarter, nirmala sitharaman
india gdp numbers, india economic gdp, india gdp april-june quarter, nirmala sitharaman, indian express, ஜிடிபி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதாரம், நிர்மலா சீதாராமன்

ஏப்ரல் – ஜூன் மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5 சதவீதமாக உள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 – 19 நிதி ஆண்டின் மார்ச் 2019 காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி 5.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தனியார் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவு தான் இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கடந்த 2018 – 19 மொத்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 6.8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது. தயாரிப்பு துறை மற்றும் வேளாண்மை துறையில் ஏற்பட்ட சரிவே, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவிற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறை கடந்த ஜூன் 2018 காலாண்டான ஜூன் 2019-ல் 12.1 சதவீதம் அதிகரித்துள்ளது.. சுரங்கம் மற்று குவாரி துறை கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 0.4 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 2.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. விவசாயம், காடு சார்ந்த வேலைகள், மீன் பிடித் தொழில் போன்ற துறைகளில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.1 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 2.0 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

மின்சாரம், கேஸ் நீர் பகிர்மானம் மற்றும் பல சேவைகள் துறையில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 8.6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, கம்யூனிகேஷன் போன்ற துறைகளில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 019-ல் 7.1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gdp nirmala sithraman economy finance rbi

Next Story
கூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டிjnu presidential elections, jnu elections, jnu, elections in jnu, jitendra suna, ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் தேர்தல், ஜிதேந்திர சுனா, jitendra suna jnu, jnu elections contestants, delhi city news, jnu news,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express