மாநிலங்களவையில் குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி கீதா என்கிற சந்திரபிரபா விவாதத்தை தொடங்கி வைத்து, புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்துள்ளார். கடைசியாக, 2013இல் 28 அமர்வுக்கு முன்பு பட்ஜெட் உரையின்போது காங்கிரஸ் எம்.பி ரேனுகா சவுத்ரி விவாதத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.எனவே, ஒன்பது ஆண்டுகளில் மாநிலங்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்த முதல் பெண் எம்பி என்ற பெருமையை கீதா பெற்றார்.
இடையூறு இல்லாத நாள்
மாநிலங்களவையில் ஜனவரி 2 ஆம் தேதி இடையூறு இல்லாத ஒரு அரிய நாளாக மாறியுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, நாடாளுமன்றம் சாதாரண இடையூறு இல்லாத கூட்டத்தை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்தாண்டு பட்ஜெட் அமர்வின் போது மார்ச் 19, 2021 அன்று இதுபோன்ற சாதாரண அமர்வு இருந்தது.டிசம்பர் 13, 2021 அன்றும் எந்த இடையூறும் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அது தனிப்பட்ட உறுப்பினர்களின் தினம் என்பதால், பொதுவானதாக கூறமுடியாது என்கின்றனர். ஜூன் 2009 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 216வது அமர்வுதான் கடைசி இடையூறு இல்லாத முழு அமர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கலப்பின முறை
தேர்வு அழுத்தத்தை சமாளிப்பது குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடும் வருடாந்திர நிகழ்வான பரிக்ஷா பே சர்ச்சா, இந்தாண்டு கலப்பின முறையில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் கடந்த ஆண்டைப் போலவே மெய்நிகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் அதனை மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி நடுப்பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்வின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பிரதமருடன் நேரில் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பைப் பெறலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பதிவு செய்வதற்கான கடைசி தேதியை அரசாங்கம் இதுவரை இரண்டு முறை நீட்டித்துள்ள நிலையில்,இன்று வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil