ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியாக இருந்து, ஒரே இரவில் கிட்டத்தட்ட கிளர்ச்சியாளராக மாறியது, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான அவரது முயற்சியில் மேகமூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அசோக் கெலாட்க்கு நெருக்கமான எம்.எல்.ஏ.க்களின் வெளிப்படையான மீறல் தலைமையை எரிச்சலூட்டியது, ஆனால் ராஜஸ்தானில் திட்டமிடப்பட்ட முதல்வர் மாற்றத்தை அமல்படுத்துவதற்கான உடனடி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அசோக் கெலாட் முகாமால் உள்ள நெருக்கடி மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட நகர்வை காங்கிரஸ் மேலிடம் கவனமாகத் திட்டமிடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்: ராஜஸ்தான் முதலமைச்சர் ரேஸ்.. முந்துகிறாரா சபாநாயகர் சி.பி. ஜோஷி!
எவ்வாறாயினும், அசோக் கெலாட்டுக்கு நெருக்கமான எம்.எல்.ஏக்கள் நடத்திய முறையற்ற கூட்டத்தை தலைமை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது. முறையற்ற கூட்டத்தின் அமைப்பாளர்கள் சிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெய்ப்பூரில் நடந்த அசோக் கெலாட்டின் சாமர்த்தியமான விளையாட்டிற்கு ஒரு நாள் கழித்து, அசோக் கெலாட்டுக்கு விசுவாசமான ஏராளமான எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் கூட்டத்தில் இருந்து விலகி, தனிக் கூட்டத்தை நடத்தி சபாநாயகரிடம் தங்கள் ராஜினாமாக்களை சமர்ப்பித்தனர். இதனையடுத்து, மூடிய கதவுகளுக்கு இடையே நடந்ததை வெளியே பகிரங்கப்படுத்தியது, ஒரு அரிய நடவடிக்கை என்றும் எம்.எல்.ஏ.க்கள் இப்படி கிளர்ச்சியில் ஈடுபடுவதை ஒழுக்கமின்மை என்றும் காங்கிரஸ் கூறியது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அசோக் கெலாட்டின் நடவடிக்கையில் இந்த நிகழ்வுகள் சிக்கலை ஏற்படுத்தும் என்று கட்சியின் பல தலைவர்கள் தெரிவித்தனர்.
மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தை சோனியா காந்தி புது டெல்லியில் சந்தித்தார், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பல்வேறு விஷயங்களை எழுப்பியுள்ளது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜஸ்தானுக்குப் பொறுப்பாளரான அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கன், தங்கியிருந்த ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலுக்கு அசோக் கெலாட் சென்றபோது, அஜய் மக்கனை சந்திக்காததால், அசோக் கெலாட் மீது தலைமை கடும் கோபத்தில் உள்ளது. அஜய் மக்கன் உடன் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் மல்லிகார்ஜுன் கார்கேவும் அந்த ஹோட்டலில் தங்கி இருந்தார்.
எனினும் மல்லிகார்ஜூன கார்கேவை அசோக் கெலாட் சந்தித்தார். எம்.எல்.ஏ.க்கள் செய்த மினி கிளர்ச்சி அவரது உத்தரவின் பேரில் செய்யப்படவில்லை என்றும் விஷயங்கள் அவரது கையை விட்டு வெளியேறியதாகவும் மல்லிகார்ஜூன கார்கேவிடம் அசோக் கெலாட் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்தி, ஒரு வரி தீர்மானத்தை நிறைவேற்றி முடிவை காங்கிரஸ் தலைவரிடம் விட்டுவிடலாம் என்று கட்சியின் மத்திய தலைவர்கள் தெரிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கோரிக்கைகளுடன் பின்னர் தலைமையை சந்தித்திருக்கலாம்.
ஆனால் காங்கிரஸ் தலைமை பார்வையாளர்களை அனுப்பி கட்சியால் அழைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கூட்டத்தில் இருந்து விலகி இருப்பது என்ற எம்.எல்.ஏ.,க்களின் முடிவு வெளிப்படையான எதிர்ப்பாகவே பார்க்கப்பட்டது.
இதற்கிடையில், அமைச்சர் சாந்தி தரிவாலின் இல்லத்தில் எம்.எல்.ஏ.க்கள் நடத்திய கூட்டம் மற்றும் ராஜினாமா சமர்ப்பிப்பு நடவடிக்கை ஆகியவை அசோக் கெலாட்டின் உத்தரவின் பேரில் செய்யப்படவில்லை என்பதை வெளிப்படுத்த அசோக் கெலாட் முகாம், அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் உட்பட அதன் தலைவர்களை களமிறக்கியது.
சச்சின் பைலட் முகாம் ஆரம்பத்தில் சோர்ந்து போனது, ஆனால் காந்தி குடும்பம் அசோக் கெலாட் மீது கோபமாக இருப்பதாக தலைமையிலிருந்து வெளிவரும் சமிக்ஞைகள் அவர்களை உற்சாகப்படுத்தியது. அசோக் கெலாட் முகாம் பலத்தை காட்டினாலும், அவர் முதலமைச்சராக வருவார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக சச்சின் பைலட்டுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
சச்சின் பைலட் இப்போது காந்திகளின் தீர்க்கமான தலையீட்டில் ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் முதல்வர் பதவிக்கு அவர்தான் இன்னும் முன்னணியில் இருந்து வருகிறார் என்று கூறி வருகின்றனர்.
அஜய் மக்கன் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே புது டெல்லியை அடைந்து நேராக சோனியா காந்தி இல்லத்திற்குச் சென்றனர், அங்கு அமைப்புப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் சோனியாவுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தனர். இராஸ்தான் நிலவரம் குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சோனியா கேட்டுக் கொண்டதாக அஜய் மக்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.,க்களின் தனிக் கூட்டத்தை ஒழுக்கமின்மையாக பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரிடம் கூறியுள்ளோம் என்று அஜய் மக்கன் கூறினார்.
இது போன்ற ஒரு அரிய நடவடிக்கையாக, முதல்வரின் மூன்று பிரதிநிதிகள் அவரையும் மல்லிகார்ஜூன கார்கேவையும் சந்தித்து, அசோக் கெலாட்டிற்கு பிறகு முதல்வராக வருபவர் குறித்து முடிவெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு வரித் தீர்மானத்தை நிறைவேற்ற மூன்று நிபந்தனைகளை விதித்ததாக அஜய் மக்கன், முந்தைய நாள் பகிரங்கப்படுத்தினார்.
அசோக் கெலாட்டிற்கு பிறகு முதல்வராக வருபவர் குறித்து முடிவெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும் அக்டோபர் 19ஆம் தேதிக்குப் பிறகுதான் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது.
“ஒரு முதலமைச்சராக அசோக் கெலாட் ஒரு தீர்மானத்தை முன்வைத்து, தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் வெளிப்படையாக அறிவித்திருப்பதால், இது ஒரு முழுமையான முரண்பாடாக இருக்கும் என்று நான் அவர்களிடம் கூறினேன். மேலும் அவர் காங்கிரஸ் தலைவரானால், தற்போது அவர் எடுத்து வரும் தீர்மானம்... அக்டோபர் 19-ம் தேதிக்குப் பிறகு அவருக்குப் பதிலாக யாரை மாற்றுவது என்பது குறித்த அதிகாரம் பெறும் தீர்மானத்தை அவர் முன்வைக்கிறார். இது எப்படி நியாயம் என்று அவர்களிடம் கேட்டேன். இது தீர்மானத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர் மற்றும் அறிவித்தனர். இந்த காரணத்தைக் கூறி, நான் இல்லை என்று சொன்னேன், ”என்று அஜய் மக்கன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஒரு பேட்டியில் கூறினார்.
பார்வையாளர்கள் எம்.எல்.ஏ.க்களை குழுக்களாக சந்திக்க வேண்டும் என்றும் ஒருவருக்கு ஒருவர் அல்ல என்றும் அவர் கூறினார்.
“ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வையும் சந்திப்பது முறையல்ல என்பதால், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கலாம் என்று நான் கூறினேன். அவர்கள் குழுவாக வரும்போது, சிலருக்கு அழுத்தம் இருக்கலாம்... அவர்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அதை அவர்கள் சுதந்திரமாகச் சொல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மல்லிகார்ஜூன கார்கே மிகவும் மூத்த தலைவர். ராஜஸ்தானைப் பொறுத்த வரையில் நானும் மிகவும் நடுநிலையாக இருக்கிறேன். நான் அசோக் கெலாட் அல்லது சச்சின் பைலட்க்கு சார்புடையவர் என்று யாரும் சொல்ல முடியாது. அதனால் நீங்கள் உங்கள் கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். அதை அப்படியே காங்கிரஸ் தலைவருக்கும் தெரிவிப்போம், என்று நான் அவர்களிடம் சொன்னேன்,'' என்று அஜய் மக்கன் கூறினார்.
"மூன்றாவதாக, தீர்மானத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் அல்லது சச்சின் பைலட் அல்லது அவரது குழுவைச் சேர்ந்த யாரும் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார். 102 எம்.எல்.ஏ.,க்களில் (அசோக் கெலாட்டுக்கு விசுவாசமானவர்கள்) ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை அப்படியே காங்கிரஸ் தலைவருக்கு அனுப்புவோம், ஆனால் அதை தீர்மானத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடியாது. இது போன்ற ஒரு விஷயம் நடக்காது, காங்கிரஸ் தலைமையிடம் முடிவை விட்டுவிடுவதாக நீங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர்... அதற்கு நீங்கள் சரத்தை இணைக்க முடியாது," என்று அஜய் மக்கன் கூறினார்.
எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிபி ஜோஷியிடம் சமர்ப்பித்துள்ளனர் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை, இது ஒரு அழுத்த தந்திரமாகவே பார்க்கப்படுகிறது, என்றும் அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் தனியாக கூட்டம் நடத்துவது குறித்து, “முதல் பார்வையில் இது ஒழுக்கமின்மை. அதிகாரப்பூர்வ கூட்டம் கூட்டப்பட்டிருக்கும் போது... அதிகாரபூர்வமற்ற முறையில் தனி கூட்டத்தை அழைப்பது ஒழுக்கமின்மை. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பார்ப்போம், என்றும் அஜய் மக்கன் கூறினார்.
நேரம்
அசோக் கெலாட் முகாமின் கிளர்ச்சியானது, தேர்தல் இழப்புகள் மற்றும் நெருக்கடிகளில் இருந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் கட்சி, அதன் எதிர்காலம் மற்றும் அமைப்புக் கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான வழிகளைத் தேடும் நேரத்தில் வருகிறது. தலைமை இப்போது இருந்ததைப் போல இல்லை என்பது புறக்கணிப்பு நிகழ்ச்சியை ஊக்குவித்ததாகத் தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.