Advertisment

இராணுவ ஆட்சியின் மூலமே நல்ல நிர்வாகம் சாத்தியம் : ஜெனரல் கரியப்பாவின் குறிப்பால் பரபரப்பு

General Cariappa in 1971 : மொழிவாரி மாநிலங்களே, நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சத்தை கெடுக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இராணுவ ஆட்சியின் மூலமே நல்ல நிர்வாகம் சாத்தியம் : ஜெனரல் கரியப்பாவின் குறிப்பால் பரபரப்பு

general k m kariappa, military rule, first indian army chief, general k m cariappa on constitution, indira gandhi term, indian army head kariappa on indira gandhi

நாட்டிற்கு நல்லது நடக்கவேண்டும் என்றால், ராணுவ ஆட்சி ஒன்றே தற்காலிக தீர்வு. அரசியலமைப்பு சட்டம், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெனரல் கரியப்பா 1971ம் ஆண்டு எழுதியுள்ள குறிப்பு, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்திய ராணுவத்தில் மிகவும் பிரபலமானவரும் மதிக்கத்தக்கவராக திகழ்ந்தவர் ஜெனரல் கரியப்பா. இவர் நாட்டின் முதல் ராணுவ தளபதியாக பதவியேற்ற நிகழ்வையே, நாம் ஜனவரி 15ம் தேதி, ராணுவ தினமாக கொண்டாடி வருகிறோம். 1953ம் ஆண்டு, ராணுவ பொறுப்பில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.ஓய்வுக்கு பிறகு போட்டியிட்ட 2 மக்களவை தேர்தல்களிலும் தோல்வியையே தழுவினார். 1986ம் ஆண்டு பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசு, இவரை பீல்டு மார்ஷலாக நியமித்தது. 1993ம் ஆண்டு தனது 94ம் வயதில் ஜெனரல் கரியப்பா மரணமடைந்தார்.

publive-image

1971ம் ஆண்டில், பிரதமர் இந்திரா காந்தி, மக்களவை தேர்தலில் இமாலய வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த நிலையில், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் கே எம் கரியப்பா, நாட்டில் நல்ல நிர்வாகம் அமைய வேண்டுமென்றால், ராணுவ ஆட்சியே தற்காலிக தீர்வு ஆக இருக்கமுடியும்.

நாட்டின் ஜனநாயகத்தை காக்க வேண்டுமென்றால், நாட்டுமக்கள் ராணுவ ஆட்சியை தேர்ந்தெடுக்க முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஜெனரல் கரியப்பாவின் இந்த கருத்திற்கு நாடாளுமன்றம் மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. தன் கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் விடுத்த வேண்டுகோளை, கரியப்பா நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் கரியப்பா எழுதிய நான்கு பக்க கடிதத்தில், அரசியலமைப்பு சட்டம், அரசியல் கட்சிகள், மொழிவாரி மாநிலங்கள் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் வேண்டுமென்றால், மூன்று அரசியல் கட்சிகள் மட்டும் இருக்கலாம். பிரிட்டன் நாட்டில் உள்ளதுபோன்று அவை தொழிலாளர், விடுதலை மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகள் போல இருக்கலாம். ராணுவ ஆட்சியின் மூலமே, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், அது ராணுவ ஆட்சியின் மூலமே நடக்கும்.

publive-image

நாட்டிற்கு நல்ல நிர்வாகம் அமைந்த பிறகு, ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். மொழிவாரி மாநிலங்களே, நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சத்தை கெடுக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

நாட்டை நிர்வாக ரீதியாக செம்மைப்படுத்த வேண்டுமெனில், ராணுவ கமாண்ட்ட், ராணுவ பகுதி, ராணுவ துணைப்பகுதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பிரிக்க வேண்டும்.

இந்தியாவில் ராணுவப்புரட்சி நிகழ வாய்ப்பே இல்லை. ஏனெனில், நாட்டின் மிகப்பெரிய பரப்பளவு, முப்படைகளுக்கும் ஒரே தளபதி இல்லாதது, மக்களிடையே நிலவும் வேற்றுமைத்தன்மை இதுபோன்ற காரணங்களால், இந்தியாவில் ராணுவ புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் ஆவண காப்பகங்களில், ஒரு தகவலை திரட்டுவதற்காக, பத்திரிகையாளர் சுகதா ஸ்ரீனிவாசராஜூ அங்கு சென்றிருந்தபோது, பிரைவேட் கலெக்சன் பகுதியில், 1948ம் ஆண்டு பிரிவில், ஜெனரல் கரியப்பாவின் இந்த கடிதம் வைக்கப்பட்டிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் கரியப்பா, தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துகளையே தொடர்ந்து கூறிவந்ததால், அவர் இந்தியாவிலேயே தங்காத அளவிற்கு 1953 முதல் 1956ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இந்திய ஹைகமிஷனராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

Indira Gandhi Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment