General election 2019 defeat congress needs to introspect
Manoj C G
Advertisment
General election 2019 defeat congress needs to introspect : 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்விகளுக்கான காரணங்களை எங்களால் ஆலோசிக்க முடியவில்லை. ராகுல் காந்தி தலைமையேற்றால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் அறிவித்தார். அவர் அறிவிப்பை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினரான ஜோதிராதித்ய சிந்தியாவும் தன்னுடைய கருத்தினை பதிவு செய்துள்ளார். தோல்வி குறித்த காரணங்களை நிச்சயமாக கட்சி அறிந்து கொள்ள செல்ஃப் அனலைஸ் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
General election 2019 defeat congress needs to introspect : சிந்தியாவின் கருத்துகள்
Advertisment
Advertisement
ஆனால் கட்சியின் மூத்த தலைவரான எம். வீரப்ப மொய்லி கூறுகையில் “கட்சியை மொத்தமாக விட்டுவிட்டு ராகுல் காந்தி செல்லவில்லை. சல்மான் குர்ஷித்தின் வார்த்தைகள் அவுட்டேட்டட்” என்றும் குறிப்பிட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இது குறித்து சிந்தியா பேசுகையில் “ இது குறித்து பேசியது தவறொன்றும் இல்லை. சுய பரிசோதனை செய்து கொள்வது மட்டுமின்றி, சில முக்கிய முடிவுகளையும் கட்சி மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். எந்த வகையில் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது, ”அதை நான் கூறிவிட இயலாது கட்சி தான் அந்த முடிவை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். ராகுல் குறித்து சல்மான் குர்ஷித் பேசியதைப் பற்றி கேட்ட போது “ஒருவரைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்புவதில்லை” என்று கூறியுள்ளார்.
சல்மான் குர்ஷித்தின் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெராவிடம் கேட்ட போது “கருத்தினை கூறியது சல்மான் குர்ஷித். உங்களின் கேள்விகளை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார். தற்போது எங்களின் நோக்கம் எல்லாம் ஹரியானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தேர்தல்களில் வெற்றி பெறுவதில் மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மக்கள் தேவையற்ற கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் தோல்வி என்பது ராகுலினால் அல்ல. காங்கிரஸ் தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பினோம். ஆனால் பாலக்கோட் மற்றும் எல்லை தாண்டிய இந்திய ராணுவ தாக்குதல் அனைத்தையும் மாற்றிவிட்டது. அவருக்கு கொஞ்ச கால இடைவெளி தேவைப்படுகிறது. அதனால் தான் அவர் தலைமை பொறுப்பை துறந்தார். ஆனால் அரசியலில் இருந்து அவர் வெளியேறவில்லை. சோனியாவின் தலைமை அனைத்தையும் சரி செய்யும். வெற்றிடத்தை ஒன்றும் ராகுல் காந்தி உருவாக்கிவிடவில்லை என வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார்.