புதுடெல்லியின் கண்காணிப்பு பட்டியலில் ஆபத்தான முதியவர் ஜார்ஜ் சொரோஸ்; ஐ.நா-வுக்கு பிரச்னை இல்லை

ஜார்ஜ் சொரோஸின் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையுடன் தொடர்புடைய உலக அளவில் குறைந்தது 68 திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஐ.நா ஜனநாயக நிதியத்திற்கு இந்தியா நான்காவது அதிக நன்கொடை அளிக்கிறது.

ஜார்ஜ் சொரோஸின் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையுடன் தொடர்புடைய உலக அளவில் குறைந்தது 68 திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஐ.நா ஜனநாயக நிதியத்திற்கு இந்தியா நான்காவது அதிக நன்கொடை அளிக்கிறது.

author-image
WebDesk
New Update
புதுடெல்லியின் கண்காணிப்பு பட்டியலில் இருக்கும் ஆபத்தான முதியவர் ஜார்ஜ் சொரோஸ்; ஐ.நா-வுக்கு பிரச்னை அல்ல

ஜார்ஜ் சொரோஸ்

பிப்ரவரியில் சிட்னியில், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரிடம், பிரதமர் நரேந்திர மோடி, அரசாங்கத்தை ஜார்ஜ் சொரோஸ் விமர்சித்தது பற்றி கேட்டபோது, ​​அவரை ‘வயதானவர், பணக்காரர், கருத்துடையவர் மற்றும் ஆபத்தானவர்’ என்று அழைத்தார். ஒரு மனிதன் நியூயார்க்கில் அமர்ந்துகொண்டு தனக்குப் பிடிக்காத அரசாங்கத்தைப் பற்றிய கதைகளை வடிவமைப்பதில் முதலீடு செய்கிறான் என்ற ஜெய்சங்கரின் சமீபத்திய சில பதில்களைப் போலவே இந்த கூர்மையான பதில் வைரலானது.

முரண்பாடு

Advertisment

ஐ.நா.-வின் ஜனநாயக நிதியத்திற்கு (UNDEF) முதலிடத்தில் உள்ள பங்களிப்பாளர்களில் இந்தியாவும் உள்ளது. இதன் நோக்கம் உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் (சி.எஸ்.ஓ.க்கள்) மூலம் உலகெங்கிலும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதாகும் - இவற்றில் பல சோரோஸின் மனிதநேயப் பேரரசுடன் தொடர்புடையவை என்பது இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்த நிதிக்கு 1,50,000 அமெரிக்க டாலர் பங்களித்தபோது - அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் ஜெர்மனிக்குப் பிறகு 45 நன்கொடையாளர்களில் 4 வது மிக அதிக நிதி அளித்த நாடாக இந்தியா இடம்பிடித்தது - என்று ஐ.நா. விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராகம் பெருமையுடன் ஒரு அறிக்கையில் தெரிவித்தது. “ஐ.நா.-வின் ஜனநாயக நிதியத்திற்கான (UNDEF) நிலையான ஆதரவு இதில் முக்கியமானது என்பதை இந்தியா ஒப்புக்கொள்கிறது. உலகளாவிய ஜனநாயக முயற்சிகளுக்கு முக்கியமான நேரம். உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்த ஐ.நா.வின் மற்ற முயற்சிகளை நிறைவு செய்வதில் ஐ.நா.-வின் ஜனநாயக நிதியத்திற்கு (UNDEF) நிதி அளிப்பதில் ஒரு தனித்துவமான பங்கை வகிப்பதால், இந்தியா ஐ.நா.-வின் ஜனநாயக நிதியத்திற்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்துகிறது.

2015-ம் ஆண்டு முதல் ஐ.நா.-வின் ஜனநாயக நிதியம் நிதியைப் பெற்று ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தும் 276 திட்டங்களில், 68 திட்டங்கள் அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒன்று, சொரோஸ்டின் ஓபன் சொசைட்டி அறக்கட்டளை (ஓ.எஸ்.எஃப்) அல்லது அதன் கிளைகள் உடன் இணைக்கப்பட்ட சிவில் சமூக அமைப்புகளால் செயல்படுத்தப்படுபவராகவும் அதன் நன்கொடைகளைப் பெறுபவராக அல்லது ஒரு கூட்டாளராக இருப்பது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment
Advertisements

அதன் தொடக்கத்திலிருந்தே சொரோஸுடன் இணைக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்கியது என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் 2015-ம் ஆண்டை அதன் புலனாய்வுக்கான தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொண்டது.

ஏனென்றால், 2014-ல் பதவியேற்ற மோடி அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியைக் குறைத்து வெளிநாட்டு மானியங்களை தாக்கல் செய்வதற்கான எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் புதிய விதிகளை அறிமுகப்படுத்தி, களையெடுக்கும் செயல்முறையைத் தொடங்கியது.

முரண்பாடாக, 2016-ம் ஆண்டில், ஓ.எஸ்.எஃப் உடன் தொடர்புள்ள உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு ஐ.நா.-வின் ஜனநாயக நிதியம் நிதி அளிக்கிறது, உள்துறை அமைச்சகம் ஓ.எஸ்.எஃப்-ஐ கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்தது - இதன் மூலம், அமைச்சகத்தின் முன் அனுமதியின்றி இந்தியாவில் உள்ள எந்தவொரு அமைப்புக்கும் அல்லது தனிநபருக்கும் எந்த நிதி உதவியும் வழங்க முடியாது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நியூயார்க்கில் உள்ள இந்திய நிரந்தர தூதருக்கு ஒரு கேள்வியை அனுப்பியது, வெளிப்படையான முரண்பாட்டிற்கான விளக்கத்தை கோரி, கருத்து தெரிவிக்க தொடர்புகொள்ள முடியாத வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் திருப்பிவிட்டது.

இந்த புலனாய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளாக 2015 மற்றும் 2021-க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் சொரெஸின் ஓ.எஸ்.எஃப் உடன் இணைக்கப்பட்ட ஐ.நா.-வின் ஜனநாயக நிதியம் (UNDEF) நிதிகளின் முதன்மையான பெறுநர்கள் பின்வருமாறு:

2021: UNDEF நிதியைப் பெற்ற 33 திட்டங்களில், 11 ஓ.எஸ்.எஃப் உடன் இணைக்கப்பட்ட சி.எஸ்.ஒ.க்களுக்குச் சென்றது. மேலே மனித உரிமைகளுக்கான லெபனான் மையம் இருந்தது. லெபனானில் நெருக்கடிக்கு மத்தியில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்ற திட்டத்திற்காக 2,75,000 அமெரிக்க டாலரை மானியம் பெற்றது. இந்த குழு அபாத் (ABAAD) என்ற அமைப்பை ஒரு கூட்டாளராக பட்டியலிடுகிறது. ஓ.எஸ்.எஃப் அபாத்-க்கு நன்கொடை அளிக்கிறது.

2020: UNDEF மானியங்களைப் பெற்ற 30 திட்டங்களில், 10 ஓ.எஸ்.எஃப் உடன் இணைக்கப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்திற்கான லெபனானை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான அபாத் வள மையம், பாலினத்தை உள்ளடக்கிய குடியுரிமை மற்றும் தலைமைத்துவத்தில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்களுடன் ஈடுபடும் திட்டத்திற்காக 4,95,000 அமரிக்க டாலர்களை மானியமாகப் பெற்றது. அபாத் ஓ.எஸ்.எஃப்-ல் இருந்து மானியங்களையும் பெறுகிறது.

2019: 32 நிதி அளிப்பவர்களில் 11 அமைப்புகள் ஓ.எஸ்.எஃப் பயனாளிகள். நைஜீரியா, கென்யா மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஆதார அடிப்படையிலான முடிவெடுப்பதற்கான ஊடக கல்வியறிவை வளர்ப்பதற்கான திட்டத்திற்காக ஆப்பிரிக்கா செக் அறக்கட்டளை எனப்படும் பிராந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் 4,95,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றது. ஏ.சி.எஃப் - ஓ.எஸ்.எஃப்-ஐ ஒரு கூட்டாளராக பட்டியலிடுகிறது.

2018: 46 UNDEF நிதி பெறும் அமைப்புகளில் 12 அமைப்புகள் ஓ.எஸ்.எஃப் உடன் தொடர்பு வைத்துள்ளனர். மேற்கு ஆசியா-வட ஆபிரிக்கா பிராந்தியத்தில் பணிபுரியும் கெய்ரோ இன்ஸ்டிடியூட் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் ஸ்டடீஸ், புதிய தலைமுறை மனித உரிமைகள் வக்கீல்களை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்காக 2,75,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றது. ஓ.எஸ்.எஃப் கெய்ரோ நிறுவனத்திற்கு நன்கொடையாளராக உள்ளது.

2017: 48 UNDEF நிதி பெறும் அமைப்புகளில் 15 பேர் ஒ.எஸ்.எஃப் உடன் இணைக்கப்பட்டுள்ளனர். "கோட் டி ஐவரி மற்றும் கேமரூனை மையமாகக் கொண்டு துணை சஹாரா ஆப்பிரிக்காவில் நேர்மையுடன் கூடிய தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்தும் திட்டத்திற்காக 2,75,000 அமெரிக்க டாலர்களைப் பெற்ற கோஃபி அன்னான் அறக்கட்டளை மேலே உள்ளது. இந்த அறக்கட்டளை ஓ.எஸ்.எஃப்-ல் இருந்து நிதியைப் பெறுகிறது.

2016: 43 UNDEF நிதி பெறும் நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் ஓ.எஸ்.எஃப் உடன் இணைக்கப்பட்டுள்ளன. நிரந்தர, பங்கேற்பு, உள்ளடக்கிய மற்றும் கூட்டு குடிமக்கள் உரையாடலை நிறுவுவதன் மூலம் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு 2,42,000 அமெரிக்க டாலர்கள் கிடைத்தது மத்திய ஆபிரிக்க குடியரசில் பொது களத்திற்கான தேடலாக உள்ளது. இது ஓ.எஸ்.எஃப் துணை நிறுவனத்தை ஒரு கூட்டாளராக பட்டியலிடுகிறது.

2015: 44 UNDEF நிதி பெறும் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் ஓ.எஸ்.எஃப் உடன் இணைக்கப்பட்டுள்ளன. துனிசியாவில் உள்ள ஆக்‌ஷன் அசோசியேட்டிவ், பங்கேற்புடன் முடிவெடுக்கும் நோக்கில், உள்ளாட்சியில் பொதுப் பங்கேற்பு, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை கட்டமைக்கும் திட்டத்திற்கு 2,42,000 அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்தது. இந்த சிவில் சமூக குழு அவோகேட்ஸ் சான் ஃபிரண்ட்டியர்ஸ் (Avocats San Frontieres) கூட்டு நிறுவனம் ஆகும். இது ஓ.எஸ்.எஃப்- ஆல் நிதியளிக்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: