காங்கிரஸின் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும், கட்சியின் ஜம்மு காஷ்மீர் பிரிவில் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இரண்டு பதவிகளையும் மறுத்த குலாம் நபி ஆசாத், தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறினார்.
ஆசாத் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அவரை ஒரு மாநிலத்தில் (UT) இதேபோன்ற குழுவில் உறுப்பினராகச் சேர்ப்பது விசித்திரமானது. இவை ஏற்கமுடியாத முடிவுகள்” என்று ஆசாத் கூறினார்.
ஆசாத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் விகார் ரசூல் வானியை ஜம்மு காஷ்மீர் பிரிவு தலைவராகவும், செயல் தலைவராக ராமன் பல்லாவையும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்த நாளில் தான் இதுவும் நடந்தது. காஷ்மீரில் ஆசாத் விசுவாசிகளின் வெளிப்படையான கிளர்ச்சியைத் தொடர்ந்து, முன்னாள் ஜே & கே பிரிவுத் தலைவர் ஜிஏ மிர் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரின் கூற்றுப்படி, காஷ்மீரின் பிரச்சாரக் குழு தலைவராக ஆசாத்தை நியமித்தது அவமானகரமானது. அவர் ஐந்து அரசாங்கங்களில், நான்கு பிரதமர்களுடன் அமைச்சராக இருந்தவர்; ஏழு ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக (ராஜ்யசபாவில்) இருந்தார். முன்னாள் முதல்வரான இவர், கடந்த 37 ஆண்டுகளாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் உள்ளார்; ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியின் பொறுப்பில் உள்ளார்,” என்று ஒரு மூத்த காங்கிரஸ் நிர்வாகி கூறினார்.
இப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் அவரை காஷ்மீரின் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், புதிய யூனியன் பிரதேச நிர்வாகிகள் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா - பிரச்சாரக் குழுவின் துணைத் தலைவராகவும், ஆசாத் விசுவாசியான ஜி எம் சரூரி அதன் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்ரா கட்சியின் யூனியன் பிரதேச அரசியல் விவகாரக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பேராசிரியர் சைபுடின் சோஸ் உறுப்பினராக உள்ளார். சோஸ்’ தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராகவும், மூத்த வழக்கறிஞர் எம் கே பரத்வாஜ் அதன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில் விகார் ரசூல் மற்றும் ராமன் பல்லா இருவரும் முறையே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பனிஹால் மற்றும் காந்தி நகர் சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆக பதவி வகித்தவர்கள். இருவரும் ஜம்மு பகுதியில் இருந்து வந்தவர்கள்.
காங்கிரஸின் தலைவர் மற்றும் செயல் தலைவர் இருவரும் ஜம்முவை சேர்ந்தவர்கள் என்பது ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த நடவடிக்கையானது உள்கட்சி பூசலை அதிகரிக்கும் மற்றும் ஜம்முவை தளமாகக் கொண்ட கட்சித் தலைவர்களுக்கும் பள்ளத்தாக்கில் உள்ளவர்களுக்கும் இடையே பிளவை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“