scorecardresearch

‘அடிமை, மிர் ஜாபர்’: காங்கிரஸ் பொதுச் செயலாளரை விளாசிய குலாம் நபி ஆசாத்

ரமேஷ் “குலாம்” என்ற பெயரை “அடிமை” என்று பொருள்பட பயன்படுத்தினார். இது தெரிந்தே மற்றும் வேண்டுமென்றே, பொதுவில் தலைவரை அவதூறு செய்யும் வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Ghulam Nabi Azad slaps defamation notice on Jairam Ramesh Tamil News
He said Ramesh through his statements committed an offence under Section 500 of IPC and is liable to pay monetary compensation. (ANI)

News about Ghulam Nabi Azad, Jairam Ramesh in tamil: ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன்னை “அடிமை”, “மிர் ஜாபர்” மற்றும் “ஓட்டுகளை பிரிப்பவன்” என்று கூறியதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் தனது “நற்பெயருக்கு” கலங்கம் விளைவித்ததற்காக 2 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வலியுறுத்தியுள்ளார்.

ஆசாத்தின் சட்ட ஆலோசகர் நரேஷ் குமார் குப்தா மூலம் அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், “ஜெய்ராம் ரமேஷ் (நோட்டீஸ் பெறுபவர்)… தேசிய அளவில் அவருக்கு (ஆசாத்) வழங்கப்பட்டு வரும் அங்கீகாரம், மரியாதை, கவுரவம் ஆகியவற்றைக் களங்கப்படுத்தவும், கேடு விளைவிக்கவும் எப்பொழுதும் சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆசாத் பதம் பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சில நாட்களிலே, உங்கள் ட்விட்டர் கணக்கின் வார்த்தையான ‘குலாம்’ இல் மீண்டும் மீண்டும் பதிவிடுவதன் மூலம், மற்றவர்களின் மதிப்பீட்டில் அவரைத் தாழ்த்தி காயப்படுத்தியுள்ளீர்கள்.

ரமேஷ் “குலாம்” என்ற பெயரை “அடிமை” என்று பொருள்பட பயன்படுத்தினார். இது தெரிந்தே மற்றும் வேண்டுமென்றே, பொதுவில் தலைவரை அவதூறு செய்யும் வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குப்தா நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் தனது வாக்குமூலத்தின் மூலம் ஐபிசியின் 500வது பிரிவின் கீழ் குற்றம் செய்துள்ளார் என்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டியவர் என்றும் அவர் கூறினார்.

வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் கீழ் வங்காள இராணுவத்தின் தளபதியாக பணியாற்றிய மிர் ஜாபர், பிளாசி போரின் போது அவரைக் காட்டிக்கொடுத்து, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வழி வகுத்தவர். அப்போதிருந்து, அவரது பெயர் “துரோகி” என்பதற்கு ஒத்ததாக மாறிவிட்டது. நமது ஊரில் குறிப்பிடப்படும் “எட்டப்பன்” என்ற சொல்லுக்கு இணையானது.

ஊடக அறிக்கைகளில் ஆசாத் மீது “குற்றச்சாட்டு மற்றும் அவதூறான புகார்கள்” அறிக்கைகள் முற்றிலும் தீங்கிழைக்கும் அடிப்படையிலானவை என்றும், ஆசாத்திற்கு “மன வேதனைகள், சித்திரவதைகள், துன்புறுத்தல்கள்” மற்றும் அவரது இமேஜைக் கெடுத்துவிட்டதாகவும், “அவற்றை சரிசெய்ய முடியாது” என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ அறிவிப்பு கிடைத்த நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அச்சு-மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆசாத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குப்தா ரமேஷுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ghulam nabi azad slaps defamation notice on jairam ramesh tamil news